fbpx

Admission: அரசு ஐடிஐ-யில் சேர இன்று முதல் ஜூன் 7-ம் தேதி வரை விண்ணப்பம்..‌‌.!

அரசு ஐடிஐ-யில் சேர 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்சேர்க்கை நடைபெற உள்ளது. அரசு ஐடிஐ-யில் சேர 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி இன்று முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் 136 உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால்94990-55689 என்ற செல்போன் எண் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று அட்சய திருதியை..!! தங்கம் வாங்கும்போது இதையெல்லாம் கவனிங்க..!!

Fri May 10 , 2024
இன்று அட்சய திருதியை. இந்த நாளில் தங்கம் வாங்கினால் நம் வாழக்கையில் செழிப்பும், செல்வமும் பெருகும் என்று நம்பப்படுகிறது. இந்த 2024 அட்சய திருதியையின்போது நீங்கள் தங்கம் வாங்கினால் இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வாங்குவது சிறந்தது. நாம் தங்கத்தை ஆபரணமாக வாங்கும்போது சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச தரம், சான்று, விற்பனை மதிப்பு என தங்கத்திற்கும் மற்ற பல பொருட்களை போலவே உலகளாவிய […]

You May Like