fbpx

இ-நிர்வாக தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு…!

இ-நிர்வாக தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து இ-நிர்வாக திட்டம் / முன் முயற்சி / தீர்வுகள் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 25-வது தேசிய விருதுகள் 2022 நவம்பரில்  வழங்கப்படவுள்ளன. 2021-22- ஆம் ஆண்டுக்கு டிஜிட்டல் மாற்றத்திற்கான அரசு நடைமுறையில் சிறந்த மறுகட்டமைப்பு செய்தல்.

மேலும் குடிமக்களை மையப்படுத்தி சிறந்த சேவை வழங்குதல்,இ-நிர்வாகத்தில் மாவட்ட அளவில் சிறப்பான முன் முயற்சி, கல்வி அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் குடிமக்களை மையப்படுத்திய சேவைகள் குறித்து சிறப்பான ஆய்வு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்துதல் இந்த வகைமைகளில் வழங்கப்படும் தேசிய விருதுகளுக்கு www.darpg.gov.in மற்றும் www.nceg.gov.in  இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 31.07.2022 கடைசி நாளாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also Read: வாகன ஓட்டிகளே கவனம்… நாளை ஒரு நாள் மட்டும் தான்…! மீறி சென்றால் சிக்கல்…! போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Vignesh

Next Post

நெல்லை-தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்..!

Wed Jul 27 , 2022
நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தென்னக ரயில்வே சார்பில், நெல்லையில் இருந்து தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவை கடந்த மாதம் வரை இருந்தது. இதற்கிடையே, நிறுத்தப்பட்ட ரயில் சேவை மீண்டும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சேவையாக தொடங்க உள்ளது. அதன்படி, இந்த ரயில் வரும் 7ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் […]

You May Like