fbpx

கவனம்…! வரும் 1-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்…! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

சேலம்‌ மாவட்டத்தில்‌ “ மஞ்சப்பை விருது” பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில் “மீண்டும்‌ மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ வகையில்‌, 2022-23- ஆம்‌ நிதியாண்டிற்காக மஞ்சப்பை விருதுகள்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும்‌ நெகிழியின்‌ தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்கு மட்டை, காகிதங்களால்‌ ஆன பைகள்‌ / உரைகள்‌ ஆகிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின்‌ பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள்‌ வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும்‌ சிறந்த பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்களைத்‌ தேர்வு செய்து இவ்விருதானது வழங்கப்படும்‌.

மாநில அளவில்‌ ஒருமுறை பயன்படுத்தும்‌ நெகிழியின்‌ தடையை திறம்பட செயல்படுத்தி, நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்கும்‌ 3 சிறந்த பள்ளிகள்‌, 3 சிறந்த கல்லூரிகள்‌ மற்றும்‌ 3சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்‌. மேலும்‌ முதல்‌ பரிசாக ரூ. 10 இலட்சம்‌, இரண்டாவது பரிசாக ரூ.5 இலட்சம்‌ மற்றும்‌ மூன்றாவது பரிசாக 3 இலட்சம்‌ வழங்கப்படும்‌.

இவ்வறிவிப்பினைத்‌ தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்களின்‌ பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தும்‌ பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கும்‌ பொருட்டு மஞ்சப்பை விருதுகளை வழங்க உள்ளது.

Vignesh

Next Post

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.‌‌..! சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் தகவல் ‌‌‌‌...!

Sat Dec 17 , 2022
கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை […]

You May Like