இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலி பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடம் மற்றும் கல்வி தகுதி :
தமிழ்புலவர் : காலிப்பணியிடம் 1 ,சம்பள விகிதம் 18500-58600 Pay Matrix-22, கல்வி தகுதிகள் மாநிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தில் பி.லிட் அல்லது பி.ஏ (அல்லது) எம்.ஏ. (அல்லது) எம்.லிட் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் மற்றும் திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
பிளம்பர் : காலிப்பணியிடம் 1, சம்பள விகிதம் 18000-56900 Pay Matrix -19, கல்வி தகுதிகள் அரசு/அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ) நிறுவனத்தால் வழங்கப்பட்ட பிளம்பர் பாடப்பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய பிரிவில் ஐந்தாண்டுகள் அனுபவம் அல்லது இரண்டாண்டுகள் தொழில் பழகுநர் (Apprenticeship) பெற்றிருக்க வேண்டும்.
காவலர் : காலிப்பணியிடங்கள் 18, சம்பள விகிதம் 15900-50400 Pay Matrix -17, தகுதிகள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். கருணை இல்லம் காப்பாளர் (பெண்), காலிப்பணியிடங்கள் 1, சம்பள விகிதம் 15900-50400 Pay Matrix -17, தகுதிகள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்கள் , காலிப்பணியிடங்கள் 27, சம்பள விகிதம் 10000-31500 Pay Matrix-10, தகுதிகள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவுப் பணியாளர்கள் : காலிப்பணியிடங்கள் 26, சம்பள விகிதம் 10000-31500 Pay Matrix-10,தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு (கோசாலை), காலிப்பணியிடங்கள் 2 , சம்பள விகிதம் 10000-31500 Pay Matrix -10, தகுதிகள் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
நிபந்தனை ; இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள் : கல்வித்தகுதிக்குரிய சான்றிதழ்கள். கூடுதல் சான்றிதழ்கள், ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை/குடும்ப அட்டை மற்றும் நன்னடத்தைச் சான்று போன்ற பிற ஆவணங்களின் நகல்களை சுயசான்றொப்பம் செய்து (Self Attested) இணைக்கப்பட வேண்டும். (அசல் சான்றிதழை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது).விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணமாக பிறப்பு சான்றிதழ் நகல் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்று (Transfer Certificate) / மதிப்பெண் சான்று (Mark Sheet) நகல் இணைக்கப்பட்ட வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது? வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் https://rameswaramramanathar.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி இணை ஆணையர்/செயல் அலுவலர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் இராமேசுவரம் – 623 526, இராமநாதபுரம் மாவட்டம்.