சேலம் மாவட்டத்தில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (PMMSY) மீன்வளர்ப்பு செய்திட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த செலவின தொகை ரூ.7,00,000/-ல் பொதுப் பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.2.80,000/- மற்றும் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.4,20,000/- வழங்கப்படஉள்ளது. மேலும், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த செலவின தொகை ரூ.7,00,000/-ல் பொதுப் பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.2.80,000/- மற்றும் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.4,20,000/ வழங்கப்பட உள்ளது.
நன்னீர் மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த செலவினத் தொகை ரூ.4,00,000/-ல் பொதுப் பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.1,60,000/- மற்றும் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (56) 60% மானியமாக ரூ.2,40,000/- வழங்கப்பட உள்ளது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ஆகும் மொத்த செலவின தொகை ரூ:,50,000/-ல் பொதுப் பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.3,00,000/- மற்றும் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60%மானியமாக ரூ.4,50,000/- வழங்கப்பட உள்ளது.