fbpx

’இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்’..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 417 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மண்டல வாரியாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. விழுப்புரம், கோவை, நாகர்கோவில், சேலம், எம்.டி.சி சென்னை, தருமபுரி, நெல்லை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 417 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது.

335 பணியிடங்களுக்கு மெக்கானிக்கல் என்ஜினியரிங் அல்லது ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் துறையில் டிப்ளமோ படித்தவர்களும் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர்களும் இந்தப் பணியிடங்களுக்கு 82 காலிப் பணியிடங்களுக்கு B.A., B.Sc., B.Com., B.B.A. / B.C.A. ஆகிய பிற பட்டப் படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயற்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஓராண்டு பணி நியமனம் பெறுவார்கள். என்ஜினியரிங் முடித்த பயிற்சிப் பணியாளர்களுக்கு ரூ.9,000 ஊதியமாக வழங்கப்படும். டிப்ளமோ முடித்த டெக்னிஷயன் பயிற்சிப் பணியாளர்களுக்கு ரூ.8,000 ஊதியமாக கிடைக்கும். என்ஜினியரிங் அல்லாத பிற பட்டப்படிப்புகளை முடித்தவர்களும் ரூ.9,000 ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் டாஸ்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும். அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தப் பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://boat-srp.com/tnstc2023/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தைச் சமர்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.10.2023 ஆகும்.

Chella

Next Post

இளம் வயதிலேயே ஏற்படும் இதய நோய்களிலிருந்து தப்பிப்பது எப்படி….?

Tue Sep 12 , 2023
ஒரு காலத்தில், எவ்வளவு வயதானாலும், ஒரு மனிதனுக்கு நோய் என்பது வராது இன்னும் சொல்லப்போனால், ஒரு மனிதனுக்கு இறப்பு என்பதே இல்லை என்ற அளவிற்கு இருந்த காலம் போய், தற்போது நோயிலிருந்து நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை மனிதன் தேடி ஓடிக் கொண்டிருக்கிறான். அந்த வகையில், சமீப காலமாக நம்முடைய நாட்டில் இளம் வயதிலேயே இதய நோய்கள் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. அந்த இதய நோயை தடுப்பது எப்படி? […]

You May Like