fbpx

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்களா?… என்னென்ன ஆவணங்கள், எப்படி ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்?

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை, எப்படி ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்? என்பதை தெளிவாக பார்க்கலாம்.

தமிழக அரசின் பொதுவிநியோக திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். அது மட்டுமல்லாமல் அரசு கொடுக்கும் நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு அடிப்படையிலேயே விநியோகிக்கப்படுவதால் இது ஒரு இன்றியமையாத ஆவணமாக பார்க்கப்படுகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டு வேண்டும் என்பவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரேஷன் கார்டில் 5 வகைகள் உள்ளன. PHH ரேஷன் கார்டுக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். PHH – AAY கார்டுதாரர்கள், 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம். NPHH கார்டுதாரர்கள் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். NPHH – s என்ற குறியீடு உள்ள ரேஷன்கார்டுக்கு சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும். ஆனால், அரிசி கிடைக்காது. NPHH – Nc என்று ரேஷன் அட்டையில் குறிக்கப்பட்டிருந்தால், அதை ஒரு அடையாளமாகவும், முகவரிக்கான சான்றாகவும் மட்டுமே பயன்படுத்த முடியும். நியாய விலைக்கடையில் எந்த பொருளும் கிடைக்காது.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? புதிதாக திருமணமானவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் தனியாக பிரித்து புதிய கார்டு வாங்க, உங்களது பழைய ரேஷன் கார்டில் உள்ள உங்கள் பெயரை நீக்க வேண்டும். இதற்காக சரியான ஆவணங்களை (திருமண பதிவு சான்று அல்லது பிற சான்றுகள்) கொடுத்து ஆன்லைன் மூலம் நீக்கிக் கொள்ளலாம். குடும்ப தலைவரின் புகைப்படம். தற்போதைய ரேஷன் கார்டு அல்லது பெயர் சேர்த்தல் நீக்குதல் கார்டு. வீட்டு வரி ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம். எரிவாயு இணைப்பு (உங்களிடம் ஏற்கனவே இருந்தால்)

ஆன்லைன் விண்ணப்பம்: முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்யவும். இப்போது ஒரு புதிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு குடும்பத்தலைவரின் பெயர் (Name of family head) என்ற பாக்ஸின் கீழ், தமிழிலும், ஆங்கிலத்திலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.

அதன் பிறகு உங்களின் முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். அடுத்து, விண்ணப்பத்தில் குடும்ப தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் அட்டை தேர்வு என்ற பாக்ஸில் உங்களுக்கு தேவையான அட்டை வகையினை தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பிறகு இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்யலாம். இது 1 எம்பி அளவில் இருக்க வேண்டும். இதற்காக கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் உள்ளிட்ட பலவற்றையும் கொடுக்கலாம். அடுத்ததாக குடும்பத்தின் பிற உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். உறுப்பினரின் பெயர், குடும்ப தலைவருக்கு என்ன உறவு? அதாவது மகன், மகள், மனைவி அல்லது கணவன் என்பதை கொடுக்க வேண்டும். தில் ஏதேனும் திருத்தம் வேண்டும் எனில் அதனை கிளிக் செய்து திருத்தம் செய்து கொள்ளலாம்.

Kokila

Next Post

உஷார்...! இது போன்ற எண்ணில் கால் வந்தால் உடனே இந்த இலவச எண்ணிற்கு புகார் அளிக்க வேண்டும்...!

Mon Jul 31 , 2023
தொலைத்தொடர்புத் துறை, தமிழ்நாடு எல்எஸ்ஏ, மத்திய உளவுத்துறை, தமிழ்நாடு காவல்துறை, ஏர்டெல் தமிழ்நாடு ஆகியவற்றின் அதிகாரிகள், மத்திய உளவுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சென்னை கிண்டியில் சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனை செய்து, அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு அமைப்பைக் கண்டுபிடித்தனர். உரிமம் பெற்ற ஐ.எல்.டி.ஓ நெட்வொர்க்கைத் தவிர்த்து சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்ற சந்தாதாரர் அடையாள தொகுதி (சிம்) பெட்டிகள் மற்றும் சிம் அடிப்படையிலான வயர்லெஸ் இணைய […]

You May Like