fbpx

நெருங்கும் பிபோர்ஜோய் புயல்..!! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மீன்வளத்துறை..!! 5 நாட்களுக்கு கனமழை..!!

பிபோர்ஜோய் புயல் காரணமாக புதுச்சேரி, மாகி பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றது. புயலாக வலுப்பெற்ற ‘பிபோர்ஜோய்’ புயல் வடக்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்தது. தற்போது, தீவிர புயலாக வலுவடைந்த ‘பிபோர்ஜோய்’ புயல் கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 890 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை…

இந்நிலையில், பிபோர்ஜோய் புயல் காரணமாக புதுச்சேரி, மாகி பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை உயரக்கூடும் என்றும் கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு..!! காலிப்பணியிடங்கள் 25,000 ஆக அதிகரிப்பா..? ஒரே போடாக போட்ட எடப்பாடி..!!

Wed Jun 7 , 2023
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வை விரைவாக நடத்தி, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்காக 10,000-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. சரியாக 8 மாதங்களுக்குப் பிறகு 2023 மார்ச் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. […]

You May Like