fbpx

நெருங்கும் பண்டிகைகள்..!! தமிழகத்தில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு..!! முதல்வர் இன்று அறிவிப்பு..?

பண்டிகை காலங்கள் நெருங்குவதால், தமிழகத்தில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, இந்தியாவிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுக்க கூட்டம் மிகுந்த இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

நெருங்கும் பண்டிகைகள்..!! தமிழகத்தில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு..!! முதல்வர் இன்று அறிவிப்பு..?

இதற்கிடையே, பண்டிகை காலங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு கொரோனா கட்டுப்பாடு விதிப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது. டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் என்பதால், நாளை முதல் கட்டுப்பாடு விதிப்பது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

தண்ணீர் லாரி மோதி விபத்து!! சென்னையில் ஐயப்ப பக்தருக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

Fri Dec 23 , 2022
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயதான ரிஷிதரன் மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி முன்னால் சென்றுகொண்டிருந்த ரிஷிதரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, நிலை தடுமாறி கீழே விழுந்த ரிஷிதரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து […]

You May Like