fbpx

நாட்டில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல்..!! அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம்..!!

2022-23ஆம் ஆண்டில் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவற்றில் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கற்பித்தல் மற்றும் கற்றல், ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.

அந்த 16 மருத்துவமனைகளில் 6 மருத்துவமனைகள் முழுமையாக செயல்படுகின்றன. 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தவிர, ராஜ்கோட் (குஜராத்), விஜய்பூர் (ஜம்மு), மதுரை (தமிழ்நாடு), அவந்திபோரா (காஷ்மீர்), ரேவாரி (ஹரியானா) மற்றும் தர்பங்கா (பீகார்) ஆகிய இடங்களில் உள்ள 6 எய்ம்ஸ்கள், செயல்பாட்டுக்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன. 2022-23ஆம் ஆண்டில் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

திறந்தநிலை பள்ளிப்படிப்பு!… வேலை வாய்ப்பு, பதவி உயர்வுக்கு அனுமதிக்க முடியாது!… பள்ளி கல்வித்துறை அதிரடி!

Wed Feb 7 , 2024
திறந்தநிலைப் பள்ளி நிறுவனங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு, பதவி உயர்வுக்கு அனுமதிக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேசிய திறந்த நிலைபள்ளி நிறுவனம் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் மூலம் நடத்தப்படுகிறது. பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்வியை தொடர்வதற்காக இந்த பள்ளிகள் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டவை. அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தபள்ளிகள் உருவாக்கப்பட்டவை. […]

You May Like