புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவித்துள்ளார். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 29ஆம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையை பணி நாளாக கொண்ட நிறுவனங்களுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி பணிநாள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். பங்குனித் திருவிழாவானது வரும் ஏப்ரல் 2ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஏப்ரல் 10ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.