fbpx

ஓவியா பாணியில் விஷ்ணுவிடம் சண்டைக்கு போன அர்ச்சனா..!! அனல் பறக்கும் பிக்பாஸ்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா, முதல் வாரத்தில் அழுது புலம்பினாலும், போகப்போக சண்டைக்கோழியாக மாறினார். பிரதீப் விஷயத்தில் மாயா, பூர்ணிமாவின் புல்லி கேங்கை சமாளித்து அப்ளாஸ் வாங்கினார். இதையடுத்து, அர்ச்சனாவுக்கான ரசிகர் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், அவர் விஷ்ணு உடன் சண்டையிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இன்று காலை லிவ்விங் ஏரியாவில் நிக்சனின் கேப்டன்சியில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டி பேசிக்கொண்டிருந்த விஷ்ணு, அர்ச்சனாவை பார்த்து பொளீர் பொளீர்னு நம்ம டயலாக்லயே வச்சு செய்யலாம் என சொன்னதும் கடுப்பான அர்ச்சனா, எங்க அடிங்க பார்ப்போம்னு ஓவியா பாணியில் எகிறி வர இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் விஷ்ணுவை திட்டித்தீர்த்து வருகின்றனர். விஷ்ணு இதற்கு முன் அக்‌ஷயாவை டார்கெட் செய்து வெளியேற்றியதை போல் அர்ச்சனாவையும் வெளியேற்றிவிடலாம் என நினைத்து இப்படி செய்து வருகிறார். ஆனால், உண்மையில் அவர் செய்வது கோமாளித்தனமான வேலை என கிண்டலடித்து வருகின்றனர். மேலும், அவரை அமுல் பேபி என்றும் கலாய்த்து வருகின்றனர்.

ஒருசிலரோ விஷ்ணு அந்நியன் பட விக்ரம் போல் நடந்துகொள்வதாக ஒப்பிட்டு மீம் போட்டு வருகின்றனர். வாரத்தின் முதல் 3 நாள் அந்நியன் போன்று யாருடனாவது சண்டை போடுவதாகவும், அடுத்த 3 நாள் ரெமோவாக மாறி பூர்ணிமா உடன் கடலை போடுவதாகவும், கமல்ஹாசன் முன்பு அம்பி போல முகத்தை வைத்துக்கொண்டு கேம் விளையாடி வருவதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Chella

Next Post

திமுக அரசு தென் மாவட்டங்களை ஒதுக்குகிறதா.? தொழிற்சாலைகள் அமைப்பதில் பாரபட்சம்.? முன்னாள் அதிமுக அமைச்சர் காட்டமான அறிக்கை.!

Wed Nov 29 , 2023
உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாட்டில் உருவாகும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார. தமிழகத்தின் முன்னாள் அமைச்சரான ஆர் பி உதயகுமார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா பதவியில் இருந்த போது […]

You May Like