நம் உணவிற்கு சுவையை கூட்டுவது இந்த உப்புதான். ஆனால் இதே உப்பை நீங்கள் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் போது, அது உங்களின் ஒட்டுமொத்த ஆரோகியத்திற்கும் தீங்கை ஏற்படுத்துகிறது. பெரியவர்களான நமக்கு எவ்வுளவு உப்பு சாப்பிட வேண்டும் என்ற அளவு தெரியும். ஆனால் குழந்தைகள் எவ்வுளவு உப்பு சாப்பிடுகிறார்கள் என நாம் கவனிக்கிறோமா? உங்கள் குழந்தைகள் அதிகளவு உப்பை எடுத்துக்கொள்வதால் அவர்களுக்கு பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
சோடியம் நீரை தக்கவைக்கக் கூடியது. நம் உடலில் சோடியத்தின் அளவும் நீரும் சமநிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய உடல் நன்றாக செயல்படும். நீங்கள் அதிகமாக உப்பை எடுத்துக் கொள்வதால், அதிகமாக தாகம் எடுக்கிறது. பெரும்பாலான சமயங்களில் இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்படாது. ஏனென்றால், அவர்களுக்கு தாக்கம் எடுக்க பல காரணங்கள் இருக்கும். அதனால்தன் கீழே நாங்கள் கூறும் சில அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.
உங்கள் குழந்தை அடிக்கடி தாகம் எடுக்கிறது எனக் கூறுகிறார்களா? அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்களா? அப்படியென்றால் சிறுநீர் எந்த நிறத்தில் இருகிரது எனப் பாருங்கள். அதிகமாக உப்பு எடுத்துக் கொண்டால், சிறுநீர் அதிக நாற்றத்தோடு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் பெரியவர்கள் மட்டுமல்ல, சிறுவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ரத்த அழுத்தம் வழக்கத்தை விட அதிகமாகும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் உள்பட பல இதய நோய் வரும் ஆபத்துள்ளது.
குழந்தைகள் எவ்வுளவு உப்பு சாப்பிட வேண்டும் : அவர்களின் வயதைப் பொருத்து குழந்தைகள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவு: 1 – 3 வயது குழந்தைகள் தினசரி 2 கிராமுக்கு அதிகமான உப்பை சாப்பிடக்கூடாது. 4 – 6 வயது குழந்தைகள் தினசரி 3 கிராமுக்கு அதிகமான உப்பை சாப்பிடக்கூடாது. 7 – 10 வயது குழந்தைகள் தினசரி 5 கிராமுக்கு அதிகமான உப்பை சாப்பிடக்கூடாது. 11 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தினசரி 6 கிராமுக்கு அதிகமான உப்பை சாப்பிடக்கூடாது. ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகள் தினசரி ஒரு கிறாமுக்கும் குறைவான உப்பை சாப்பிட்டால் போதும்.