இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இந்திய முஸ்லிம்கள் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான கமல் ஆர். கானின் சர்ச்சை ட்வீட் வைரலாகியுள்ளது.
இஸ்ரேலில் டெல் அவிவ்-யில் ஹமாஸ் பாலஸ்தீன இஸ்லாமியக் குழு நடத்திய கொடூர தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியதுடன், போராளிகள் பல இடங்களில் வான், தரை மற்றும் கடல் வழியாக பல இடங்களில் ஊடுருவி, நாட்டைப் பிடித்தனர். இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேபோல அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், உதவி தேவைப்பட்டால் அந்நாட்டு இந்திய தூதரகத்தை அணுகலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய முஸ்லிம்கள் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான கமல் ஆர். கானின் சர்ச்சை ட்வீட் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து அவர எக்ஸ் தள பதிவில், அரேபிய முஸ்லீம்கள் பாலஸ்தீனத்தைப் பற்றிப் பேசாத நிலையில், இந்திய முஸ்லிம்கள் ஏன் பாலஸ்தீன முஸ்லிம்களைப் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை! இந்திய முஸ்லிம்களான நீங்கள் அரேபியர்களை விட பெரிய முஸ்லிம்களா? என்று சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். மேலும், அமெரிக்கா இஸ்ரேலை வெளிப்படையாக ஆதரித்தது, அரேபியர்கள் அதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இதனால்தான் அரபு நாடுகள் ரஷ்யா மற்றும் சீனாவுடன் கைகோர்த்துள்ளன. அரேபியர்கள் அமெரிக்காவை நம்பவில்லை.” என்றும் கூறியுள்ளார்.