fbpx

Exam: மாணவர்களே ரெடியா?… இன்றுமுதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம்!

Exam: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முறைகேடுகளை தடுக்க 4,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்வுகள் முறையாக நடைபெற ஏதுவாக, தேர்வுத் துறையால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.

இதேபோல், புதுச்சேரியிலும் 5,758 மாணவர்கள், 6,236 மாணவிகள் என மொத்தம் 11,994 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக புதுச்சேரியில் 31 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் ஆண்கள் 945 மாணவர்களும், 1,290 மாணவிகள் என மொத்தம் 2,235 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 9 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாஹியில் 397 மாணவர்கள், 337 மாணவிகள் 6 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். ஏனாமில் 393 மாணவ மாணவிகள் 3 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

Readmore: ‘இவ்வளவு நடந்துருக்கா’..? ’ஸ்டெர்லைட் ஆலையை மூடியதில் தவறே இல்லை’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

Kokila

Next Post

Admission: இத்தனை சலுகைகளா?... அரசு பள்ளிகளில் இன்றுமுதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!…முன்கூட்டியே தொடங்க என்ன காரணம் தெரியுமா?

Fri Mar 1 , 2024
Admission: தமிழக அரசுப் பள்ளிகளில் 2024-2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை இன்றுமுதல் மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும், பள்ளி வளாகம் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்களைக் கொண்டும், ஆசிரியர்களை கொண்டும் பேரணி நடத்துவது, துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வது […]

You May Like