fbpx

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா..? பொதுக்குழு வழக்கு தீர்ப்பின் முழு விவரம்..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது பற்றி பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் தனிநீதிபதி தீர்ப்பு செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதாவது ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.. எனவே ஜூலை 11 பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும்..

இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பின் விவரங்கள் வெளியாகி உள்ளது.. “ ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை.. ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து செயல்பட முடியாத போது இருவரும் சேர்ந்து கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது.. மோதல் இருக்கும் நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து பொதுக்குழுவை கூட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.. ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு அதிமுகவின் செயல்பாட்டை முடக்கிவிடும்..

ஜூன் 23 பொதுக்குழு அன்றே, ஜூலை 11 பொதுக்குழு தொடர்பான வெளியானது செல்லும்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது பற்றி பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும்.. பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் தான் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுக்கொடுத்தார்..

ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், 23-க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது.. ஓபிஎஸ் இருந்த போது தான் ஜூலை 11-ல் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால் தனக்கு தெரியாது என்று அவர் கூற முடியாது.. அடிப்படை உறுப்பினர்களால் தேர்வாகும் உறுப்பினர்கள் உள்ல அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது..

Maha

Next Post

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை கனமழை தொடரும்.. எந்தெந்த இடங்களில் தெரியுமா..?

Fri Sep 2 , 2022
தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வட தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ […]
rain

You May Like