fbpx

மாணவர்களே பொதுத்தேர்வுக்கு தயாரா..? இனி விடுமுறையே கிடையாது..!! அமைச்சர் சொன்ன தகவல்..!!

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும் நீட், கிளாட் போன்ற தேர்வுகள் பொதுத்தேர்வு தேதிகளோடு வராத வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 3 வகையான அட்டவணை தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு சார்பில் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், அந்த வகையில் நீட் தேர்வு பயிற்சிக்கு 46,216 மாணவர்களும், ஜே.இ.இ பயிற்சிக்கு 29279 மாணவர்களும், 31,730 மாணவர்கள் இரண்டுக்கும் சேர்ந்து விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார். மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளதாகவும்” அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 225 மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. நீட் தேர்வு எழுத 46,216 பேரும், ஜே.இ.இ., தேர்வுக்கு 29,279 பேரும், இரு தேர்வுகளையும் எழுத 31,730 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் எனக்கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை இல்லை..! பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்!… ஆட்சியர்கள் அறிவிப்பு!

Wed Nov 15 , 2023
தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று அதி கனமழை எனப்படும் 25 சென்டி […]

You May Like