அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை நேர நீட் பயிற்சி வழங்கப்படும் என தொழிற்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அதாவது, மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், “ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். “யாரையும் கட்டாயப்படுத்த கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பாடவாரியாக பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், நுழைவுத் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியலைதயார் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.