fbpx

எங்க ரெண்டு பேருக்கு equal ஹா அங்க பிளேயர் இருக்காங்களா..! மற்றவர்களை குறைவாக மதிப்பிடும் விசித்ரா.. கொளுத்திப்போட்ட பிக்பாஸ்..!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கியது, 18 போட்டியாளர்கள் பங்குபெற்று இருக்கும் இந்த நிகழ்ச்சியில் புது விதிகளை கொண்டுவந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வழங்கிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் டீம். அதன் படி இந்த சீசன் 7ல் இரண்டு வீடு, ஒரே கிட்சன், ஸ்மால் பாஸ், இரண்டு ஏவிக்ஷன் என சென்று கொண்டிருக்கிறது.

அதன்படி நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் வர்மா, குறைவாக கவர்ந்த 6 பேரை (ஐஷு, வினுஷா, நிக்ஸன், ரவீனா, பவா செல்லதுரை, அனன்யா) Small Boss வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு இருவீட்டாரும் மாறி மாறி எதிர்வீட்டினரை நாமினேட் செய்தனர். அதன்படி ஐஷு, அனன்யா, ரவீனா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமைக்க வேண்டும் என்று பல விதிகள் இருந்தன.

இந்நிலையில் இன்றைய தினத்துக்கான புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் விதிகளை மீறி ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களுடன் சமையலுக்கு உதவி செய்ததால், விசித்ரா மற்றும் யுகேந்தர் ஆகியோரை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்புவதாக பிக்பாஸ் தெரிவித்தார். அப்போது பிரதீப், ஏற்கனவே நாமினேட் ஆகி சுமால் பாஸ் வீட்டில் இருக்கும் ஆறு பேரில் 2 பேரை இங்கு அனுப்பி விடுமாறு கூறினார், அப்போது குறுக்கிட்ட விசித்ரா, எதுக்கு ரெண்டு பேர் வேனும்னு கேட்டிங்க, எங்க ரெண்டு பேருக்கு சமமாக அங்க பிளேயர் இருக்காங்களா, என்று பிரதீப் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இன்றையா நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்டுகிறது.

Kathir

Next Post

நொடி பொழுதில் மனிதர்களை கொல்லும் விலங்குகள்!… கொடூர, விசித்திரமான விலங்குகள் பற்றி அறிந்துகொள்வோம்!

Tue Oct 3 , 2023
இந்தோ பசிபிக்கில் மிக மெதுவாக நகரக்கூடிய இந்த பாக்ஸ் ஜெல்லி மீன்கள் மிக விஷமான கடல் விலங்குகளாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி பிஷ்ஷின் வால் போன்ற பகுதிகள் 10 அடி நீளம் வரைக்கும் வளரக்கூடியது. இது ஆயிரக்கணக்கான கொட்டும் செல்களை வரிசையாக கொண்டுள்ளது. இது நம்மை தாக்கினால் ஒரே நேரத்தில் அது இதயம், நரம்பு மண்டலம், தோல் செல்களை தாக்கும் அளவிற்கு நச்சுக்கள் […]

You May Like