fbpx

சர்க்கரை நோயாளிகள்: கொய்யாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? சாப்பிடும் முறை தெரிஞ்சுக்கோங்க….

தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய்.

உலகில் கிட்டத்தட்ட ஐநூறு மில்லியன் அதாவது, உலக மக்கள்தொகையில், பத்தில் ஒருவருக்கு, இரத்த சர்க்கரை பாதிப்பு உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதில் பத்து சதவீதம் பேர் டைப் 1 எனும் பாதிப்பிலும், மீதமுள்ள தொண்ணூறு சதவீதம் பேர் டைப் 2 என்ற பாதிப்பிலும் இருப்பதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகளாக உள்ளன. இந்த சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அதை ஒருபோதும் முழுமையாக குணப்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது. ஆனால் இதை கட்டுப்படுத்த சில இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கொய்யா.

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான கொய்யா: எப்போது சாப்பிடலாம்?
எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்த கொய்யாவில் உள்ள நன்மைகளை பெற இதை சரியான வழியில் மற்றும் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். அதோடு இரவில் தூங்க போவதற்கு முன் கொய்யா இலைகளை மென்று சாப்பிடுவது அளப்பரிய பலன்களை தரும். அதுமட்டுமில்லாமல் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் கொண்டு வரும்.

நீரிழிவு நோயாளிகள் எந்த நேரத்திலும் கொய்யா (Guava) இலைகளை உட்கொள்ளலாம், ஆனால் இரவில் அதை உட்கொள்வது மிகவும் நல்லது என்று கருதப்படுவதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்குக் காரணம், இரவில் கொய்யா இலைகள் உடலில் நன்றாகக் கரைந்து, அதனால் உடலில் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். எனவே சர்க்கரை நோயாளிகள் இரவில் தான் இதை சாப்பிட வேண்டும்

இலைகளை மெல்லும் சரியான வழி: கொய்யா இலைகளை மெல்லும் முறையையும் கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இதற்கு, சிறிய மற்றும் பச்சை நிறத்தில் உள்ள நல்ல இலைகளைத் தேர்ந்தெடுக்கவும். 3-4 இலைகளை பறித்து, அவற்றை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். பின் ஒவ்வொன்றாக மெல்ல வேண்டும். மெல்லும் போது, ​​இலைகளில் இருந்து சாறு வரும், அதை நீங்கள் குடிக்கலாம். இதைச் செய்வதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பல நன்மைகள் கிடைக்கும்

கொய்யாவில் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அதை உட்கொள்வதால் அதிக கலோரிகளைப் பெறுவது தவிர்க்கப்படுகின்றது. ஒரு கொய்யாவில் 37 முதல் 55 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது தவிர, கொய்யாவை உட்கொண்ட பிறகு ஒருவருக்கு நீண்ட நேரம் பசி இருக்காது. இதற்காக தான் எடை குறைக்க விருப்பமுள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது.

Next Post

’இனி நான் தான் எல்லாம்’..!! ஐகோர்ட் கிளையில் நித்தியானந்தா பரபரப்பு மனு..!!

Tue Nov 7 , 2023
மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிகரை நியமித்தது செல்லாது எனவும், தானே அடுத்த மதுரை ஆதீனம் எனவும் நித்தியானந்தா சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாமியார் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அவர் கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக அவரே கூறியிருந்தார். அங்கிருந்து வீடியோ மூலம் சொற்பொழிவு ஆற்றி வந்தார். இந்நிலையில், நானே மதுரை ஆதீனம் என நித்தியானந்தா சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. […]

You May Like