fbpx

வேலைக்கு செல்லும் முன் கணவன்-மனைவி முத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா..? நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஒருவரிடம் அன்பு காட்டுவது பல வகைகள் உள்ளன. அதில், ஒன்று தான் முத்தம். ஒரு கணவர் அல்லது மனைவி தனது பார்ட்னருக்கு பகிரப்படும் முத்தம், மிகுந்த காதல் மற்றும் நெருக்கமான வெளிப்பட்டை குறிப்பதாகும். இந்த நெருக்கத்தின் செயலானது இருவரையும் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் நெருக்கமாக இணைக்க உதவுகிறது. முத்தத்தின் நன்மைகள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வில் குறிப்பிட்ட படி, முத்தம் கொடுப்பது மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.

ஆயுளை அதிகரிக்கும் முத்தம்..?

1980 காலத்தில், உளவியல் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், 2 ஆண்டுகள் முடிந்த பிறகு, விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியிடப்பட்டது. அதாவது, கணவர்கள் வேலைக்குச் செல்லும் முன்னதாக தினமும் மனைவியை முத்தமிடும் போது அவர்கள், தங்கள் மனைவிகளை முத்தமிடாத கணவர்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட காலம் சராசரியாக 5 ஆண்டுகள் அதிகமாக வாழ்வதாகக் கண்டறியப்பட்டது. வேலைக்குச் செல்லும் முன் கணவர்கள் தங்கள் மனைவிக்கு முத்தமிடுவது நீண்ட ஆயுளைத் தவிர வேறு சில நன்மைகளையும் அவர்கள் பெறுகின்றனர்.

அதாவது, அலுவலகம் செல்வதற்கு முன்னதாக மனைவிக்கு குட் பாய் கிஸ் கொடுத்த கணவர்கள், இவ்வாறு கொடுக்காதவர்களைக் காட்டிலும் 20 முதல் 35% அதிக பணம் சம்பாதிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து ஜெர்மனியில் நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், வீட்டை விட்டு வெளியேறும் முன் தங்கள் மனைவிகளை முத்தமிட்ட 87% பணியாளர்கள் ஊதியத்தில் அதிகரிப்பு மற்றும் அலுவலகத்தில் சிறந்த பதவிகளை வகித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

செலெக்டா என்ற மேற்கு ஜெர்மன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின்படி, “தங்கள் மனைவிகளை முத்தமிடாமல் காலையில் வீட்டை விட்டு வெளியேறும் கணவர்கள் அல்லது அவர்களை பிரிந்திருக்கும் கணவர்கள், எதிர்மறை மனப்பான்மையைக் கொண்டிருப்பார்களாம். அவர் தனது சுற்றுப்புறம் மற்றும் வேலையிடத்தில் அக்கறையற்றவராகக் காணப்படுவர். அதே சமயம் ஒரு ஆண் தனது மனைவியை நேசிப்பதை நிறுத்திவிட்டாலும், ஆண்கள் தங்கள் மனைவிகளைப் பற்றி அலட்சியம் காட்டுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : உயிரைப் பறிக்கும் ’Non Stick’ பாத்திரங்கள்..!! உங்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கிப் போடுங்க..!! எச்சரிக்கும் ICMR..!!

Chella

Next Post

சாலையில் செல்லும்போது எதிர்பாராமல் பணம் கிடைத்தால் அதிர்ஷ்டமா..? ஆன்மீகம் என்ன சொல்கிறது..?

Sun May 19 , 2024
நாம் சாலையில் நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக பணம் கிடைத்திருக்கும். அப்படி கீழே கிடந்த பணத்த எடுத்து பயன்படுத்தும் போது நமக்குள் ஒருவித அச்சம், பாவம் வந்துவிடுமோ என்ற மன உளைச்சல் ஏற்படும். அந்த பணத்தைப் பயன்படுத்தலாமா? கூடாதா? என்று ஒருவித பயம் உணர்வு ஏற்படும். அப்படி சாலையில் பணம் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்று ஆன்மீகத்தில் சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அது குறித்து […]

You May Like