நிலப்பரப்பு மற்றும் புவியியல் அமைப்பு ஆகியவை காரணமாக உலகில் விமானநிலையங்களே இல்லாமல் பல்வேறு நாடுகள் உள்ளன. இதுகுறித்தான பட்டியல் அடங்கிய தொகுப்பை பார்க்கலாம்.
நவீன காலத்தில் விமான சேவை என்பது உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் மிகவும் இன்றியமைதாக சேவையாக உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் பொதுவாக சிறிய மற்றும் பெரிய நகரங்களில் கூட விமான சேவை அவசியமானதாக உள்ளது. இப்படி இருக்கையில், விமான நிலையங்களே இல்லாமல் சில நாடுகள் உள்ளன. அதுகுறித்தான பொதுஅறிவு விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
மத்திய கடற்கரை ஓரத்தில் அதாவது பிரான்ஸ் நாட்டின் அருங்காமையில் மொனாக்கோ என்ற நாடு அமைந்துள்ளது. மிக சிறிய நகரமாக விளங்கிவரும் இந்த நாட்டில், போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால், இங்கு விமான நிலையம் அமைக்கப்படவில்லை. வெறும் 10 வார்டுகளை மட்டுமே கொண்டுள்ள இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 40 ஆயிரத்திற்கு குறைவு என்று கூறப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்தமாக வெறும் 6 கிலோ மீட்டர் நிலப்பரப்பை கொண்ட இந்த நாட்டிற்கு கடல்வழியாக போகலாம்.
உலகின் மிகச்சிறிய நாடான வாடிகன் நகரத்தில் விமான நிலையம் கிடையாது. இதன் மொத்த மக்கள் தொகையே சுமார் ஆயிரம் தான் இருக்கும். இதன் காரணமாக அங்கு விமான நிலையம் இல்லை என்று தெரிகிறது. அதே போல கடல் அல்லது நதி வழி போக்குவரத்தும் கிடையாது. சாலை போக்குவரத்து மட்டும் தான். இருப்பினும், சியாம்பினோ மற்றும் ஃபியூமிசினோ உள்ளிட்ட மற்ற விமான நிலையங்கள் அருகே தான் உள்ளன.
இத்தாலியால் சூழப்பட்டள்ள உலகின் பழமையான நாடுகளில் ஒன்றான சான் மரினோ, நிலப்பரப்பில் மிகவும் சிறியதாக இருப்பதால் இங்கு விமான நிலையம் இல்லை. சாலை போக்குவரத்து மட்டுமே உள்ளன. நாடு சிறியதாக இருந்தாலும், புளோரன்ஸ், போலோக்னா, இத்தாலி, வெனிஸ் மற்றும் பிசா போன்ற பல விமான நிலையங்கள் இதற்கு அருகிலேயே அமைந்துள்ளன.
லிச்சென்ஸ்டீன் எனும் நாட்டில் மொத்தமே சுமார் 75 கி.மீ பரப்பளவு தான் உள்ளது. அதிக செங்குத்தான நிலப்பரப்புகள் இல்லை என்றாலும் இது மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் விமான நிலையம் அமைப்பதற்காக சூழல் இல்லை. இந்த நாட்டிற்கு போக்குவரத்து அம்சமாக கார், பேருந்து உள்ளது. இந்தநாட்டிற்கு 120 கிமீ தொலைவில் உள்ள சூரிச் விமான நிலையங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
3000 மீ உயரத்திற்கு சிகரங்களை கொண்ட நாடு அன்டோரா, பெரிய பரப்பளவை கொண்டிருந்தாலும், முழுவதும் மலைகள் சூழ்ந்துள்ளதால் இங்கு விமான நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இந்த நாடு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே பைரனீஸ் மலைகளால் முழுமையாக சூழப்பட்டுள்ளது. மேலும் 3000 மீட்டர் உயரத்தில் விமானம் பறப்பது சற்று ஆபத்தானதாகவும் கடினமாகவும் இருக்கும். ஆனால் 200 கிமீ சுற்றளவில் பார்சிலோனா, லெரிடா ,ஜிரோனா போன்ற விமான நிலையங்கள் உள்ளன.