fbpx

வாகன இரைச்சலால் இத்தனை பாதிப்புகளா..? மருத்துவ ஆய்வு விடுக்கும் எச்சரிக்கை என்ன?

மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட போக்குவரத்து இரைச்சல் ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது என ஆய்வில் கண்டறிந்துள்ளன.

காதைக்கிழிக்கும் வாகனங்களின் ஒலிகள் நகரங்களில் வாழ்வோர் அன்றாடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள்.இவை அப்போதைக்கு எரிச்சலை தந்தாலும் அதன் பின் உடல் நலனுக்கே உலை வைக்கும் மறைமுகமான ஆபத்தும் ஒளிந்திருப்பதாக எச்சரிக்கின்றன மருத்துவ ஆய்வுகள். இந்த ஆய்வில் டென்மார்க், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

ஆய்வின் முடிவில் மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட போக்குவரத்து இரைச்சல் ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. போக்குவரத்து இரைச்சலால் ஏற்படும் ஒலியை 10 டெசிபலுக்கு மேல் கேட்கும் ஒவ்வொரு முறையும், இதயப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு 3.2 சதவிகிதம் அதிகரிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற இரைச்சல்களைக் கேட்பது தூக்கத்தின் அளவைக் குறைத்து, ரத்தக்குழாய்களில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். விளைவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தக்குழாய் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படும்.

இது தொடர்பாகப் ஜெர்மனி பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மூத்த பேராசிரியர் கூறியதாவது, “இந்த ஆய்வின் முடிவில் இதயம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதில் போக்குவரத்து இரைச்சல் ஒரு முக்கியக் காரணி என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த தீர்வு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போக்குவரத்து இரைச்சல் ஏற்படுவதை கட்டுப்படுத்துவது ஆகும்.

10 டெசிபல் அளவுக்கும் குறைவாக சத்தங்களை ஏற்படுத்தும் மாற்று போக்குவரத்து வழிமுறைகளை பயன்பாட்டில் கொண்டு வருவது, வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துதல், குறைந்த சத்தம் எழுப்பும் டயர்களைப் பயன்படுத்துவது போன்றவற்றையும் செய்யலாம். மேலும், சைக்கிளை பயன்படுத்துவது, போக்குவரத்து இரைச்சலைக் குறைக்க பொதுப் போக்குவரத்துகளில் பயணிப்பது போன்ற முயற்சிகளில் தனிநபர்கள் ஈடுபடலாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

Next Post

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் கொலைக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமா...? ஜெய்சங்கர் பதில்

Sun May 5 , 2024
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஜெய்சங்கர் கூறினார் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரைக் கொன்றதாகக் கைது செய்து குற்றம் சாட்டப்பட்ட மூன்று இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனடா காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருவதாகக் கூறி, நிஜ்ஜார் கொலை […]

You May Like