fbpx

தேங்காய் மட்டையில் இவ்வளவு மருத்துவ குணங்களா..? இது தெரிந்தால் இனி தூக்கிப் போட மாட்டீங்க..!!

பொதுவாகவே பெரும்பாலானோர் தேங்காயை பயன்படுத்துவது உண்டு. ஏனென்றால், இது ஆரோக்கியத்தை அதிகமாக கொடுப்பது என அனைவரும் அறிந்ததே. ஆனால், தூக்கி எரியும் தேங்காய் மட்டையில் இருக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

காயத்தை சரிசெய்யும் தேங்காய் மட்டை :

காயங்களுக்கு அடிக்கடி தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக காயம் ஏற்படும் போது வீங்கிய இடத்தில் தேங்காய் எண்ணெய்யையும் தடவுவோம். ஆனால், தேங்காய் மட்டையால் காயத்தின் வீக்கத்தையும் நீக்கலாம். தேங்காய் மட்டையை அரைத்து மஞ்சளுடன் கலந்து எரியும் இடத்தில் தடவினால், வீக்கம் குறையும்.

பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கும் :

பலருக்கு பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். இந்த பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளது. தேங்காய் மட்டையைப் பயன்படுத்தி பற்களின் மஞ்சள் நிறத்தையும் நீக்கலாம். இதற்கு தேங்காய் முடியை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்த பொடியில் சோடா கலந்து பல்லில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். சில நாட்களில் அதன் விளைவை நீங்கள் காண்பீர்கள்.

தலை முடிவை கருமையாக்கும் :

வெள்ளை முடியை கருமையாக்கவும் தேங்காய் மட்டை பயன்படுகிறது. இதற்கு நீங்கள் தேங்காய் மட்டையை கடாயில் சூடாக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தேங்காய் எண்ணெய்யில் கலக்கி, தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முடி கருமையாக மாறும்.

பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு :

பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட தேங்காய் மட்டையை பயன்படுத்தலாம். இதற்கு தேங்காய் மட்டையை அரைத்து, தினமும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பிரச்சனை சரியாகும். எனவே, தேங்காய் மட்டையில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள பல பிரச்சனைகளை குணப்படுத்தும்.

Read More : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! அகவிலைப்படி 53% ஆக உயர்வு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

English Summary

Do you know the benefits of burning coconut shell? You can see this in this post.

Chella

Next Post

ஒரே வாரம் போதும்..!! பாத வெடிப்பு முழுமையாக குணமாக சூப்பர் டிப்ஸ்..!! செம ரிசல்ட்..!!

Sat Oct 19 , 2024
Foot eruptions. Here are some simple steps to help you get rid of it.

You May Like