fbpx

”நாங்கள் ஸ்லீப்பர் செல்களா”..? ”நாம் தமிழர் கட்சியே ஸ்லீப் ஆகிவிட்டது”..!! கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் ஆதங்கம்..!!

“நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாம் தமிழர் கட்சிதான் ஸ்லீப் ஆகிவிட்டது” என கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 50 பேர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். நெல்லையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி ஆலோசனைக் கூட்டத்தின் போது சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் உடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்றைய தினமே பலர் வெளியேறுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், இன்று 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளனர். உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சியில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பார்வின், ”சீமான் புரட்சியாக பேசுவார். ஆனால், வெற்றி பெறக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளார். நம் முன்பு யாரும் எம்எல்ஏ ஆகி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். வேலையை விட்டுவிட்டு கட்சிக்காக உழைத்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாம் தமிழர் கட்சி அடுத்த கட்டத்துக்கு நகராது என்பதை தெரிந்துகொண்டோம். சீமான் உளவியல் ரீதியிலான டார்ச்சரில் இருக்கிறார். நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் இல்லை. நாம் தமிழர் கட்சியே ஸ்லீப் ஆகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Read More : மக்களே..!! மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!! அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!

English Summary

“We are not sleeper cells, we are the Tamil Party that has gone to sleep,” said the executives who left the party.

Chella

Next Post

54 வயதில், கள்ளக்காதலனுடன் உல்லாசம்... குளிக்க சென்ற பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..

Sat Nov 30 , 2024
woman-was-fooled-by-her-facebook-lover

You May Like