fbpx

10, +2 முடித்தவரா நீங்கள்?… தமிழக மருத்துவத்துறையில் நிரந்தர வேலை!… முழுவிவரம் இதோ!

தமிழக மருத்துவத்துறையில் லேப் டெக்னீசியன் மற்றும் தொழிற்சார் மருத்துவ சிகிச்சை வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் மருத்துவ துறையின் கீழ் செயல்படும் மருத்துவ துறை ஆட்சேர்ப்பு தளமான TNMRB (Tamil Nadu Medical Services Recruitment Board) கீழ் லேப் டெக்னீசியன் மற்றும் தொழில்முறை சிகிச்சை வல்லுநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஒருவருட லேப் டெக்னீசியன் படிப்பு அல்லது இளங்கலை தொழில்முறை சிகிச்சை படிப்பு முடித்து இருக்க வேண்டும். இதற்கு கடந்த 12 ஜூன் 2023 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி தேதியாக 02 ஜூலை, 2023 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 மற்றும் 25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லேப் டெக்னீசியன் – கிரேடு III -332. தொழில்முறை சிகிச்சை வல்லுநர்கள் (Occupational Therapist) – 08. 10, +2 முடித்து ஒருவருட லேப் டெக்னீசியன் படிப்பை முடித்து இருக்க வேண்டும். இளங்கலை தொழில்முறை சிகிச்சை (Bachelor Degree in Occupational Therapy) பட்டப்படிப்பை முடித்து இருக்க வேண்டும். சம்பளம்: லேப் டெக்னீசியன் – கிரேடு III – ரூ.13,000/- தொழில்முறை சிகிச்சை வல்லுநர்கள் (Occupational Therapist) – ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- ஆகும்

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வாயிலாக தகுதி தரவு நடத்தி மதிப்பெண் அடிப்படியில் வேலை வழங்கப்படும். விண்ணப்பிக்க தொடங்கிய தேதி – 12 ஜூன் 2023. விண்ணப்பிக்க கடைசி தேதி – 02 ஜூலை 2023 ஆகும். விண்ணப்பிக்கும் முறை : தமிழ்நாடு மருத்துவ துறை ஆட்சேர்ப்பு தளமான TNMRB (Tamil Nadu Medical Services Recruitment Board) இன் அதிகாரபூர்வ தளமான mrbonline.in க்கு செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் வெளியிப்படட்ட உரிய வேலைவாய்ப்பு லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் பயனர்கள் தங்கள் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
அதனை தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்கள் கொடுத்து (குறிப்பிட்ட அளவில் புகைப்படம், சான்றிதழ் , உறுதி அறிக்கை) குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Kokila

Next Post

93 மணி நேரத்திற்கும் மேலாக சமைத்த இளம்பெண்!... உலக சாதனை படைத்து அசத்தல்!

Fri Jun 16 , 2023
நைஜீரியாவை சேர்ந்த ஹில்டா பாசி என்ற 26 வயதான பெண், 93 மணி நேரம் 11 நிமிடங்களுக்கு இடைவிடாமல் சமைத்து நீண்ட நேரம் தனியாக சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். முன்னதாக, இந்திய சமையல் கலைஞரான லதா டோண்டன் 87 மணி 45 நிமிடங்களில் சாதனை படைத்திருந்ததை ஹில்டா பாசி தற்போது முறியடித்துள்ளார். மே 11 வியாழன் அன்று தொடங்கி மே 15 திங்கட்கிழமை வரை தொடர்ச்சியாக சமையல் […]

You May Like