fbpx

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை!… ரூ.92,000 வரை சம்பளம்!… உடனே விண்ணப்பியுங்கள்!… முழுவிவரம் இதோ!

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைகளுக்கு ரூ. 29,200 – ரூ. 92,300 வரை சம்பளமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது, இப்பொது பல பதவிகளுக்கான விண்ணப்பங்களின் அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.
அதன்படி, SSC CHSL 2023-க்கான பதிவுகளுக்கான விண்ணப்பம் மே 9 ஆம் தேதி தொடங்கியது, இதில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் SSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஜூன் 8 வரை கொடுக்கப்பட்டுள்ளது, இதில் சுமார் 1600 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். கீழ் பிரதேச எழுத்தர்/ஜூனியர் செயலக உதவியாளர் (JSA) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆனால், பெண் வேட்பாளர்கள், பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ள நபர்கள் (PwBD), மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். லோயர் டிவிஷன் கிளர்க் (எல்டிசி) ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டென்ட் (ஜேஎஸ்ஏ) ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படுகிறது. மேலும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிகளுக்கு சம்பளமாக ரூ.25,500 – ரூ.81,100 மற்றும் ரூ.29,200 – ரூ.92,300 ஆக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_09052023.pdf-ல் தெரிந்துகொள்ளலாம்.

Kokila

Next Post

வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு!... அதிலும் 19 வயதுடையவர்கள்தான் அதிகம்!... தமிழ்நாடு அரசு ஷாக் ரிப்போர்ட்!

Sun May 14 , 2023
தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. இதுதவிர சென்னையில் கூடுதலாக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. பட்டப் படிப்பு வரையான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுநிலை படிப்பு, பொறியியல், மருத்துவம் உட்பட தொழில் படிப்பின் தகுதியைசென்னை […]

You May Like