கேரள மாநிலம் மலப்புரம் அருகே மஞ்சேரி என்ற பகுதி உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 44 வயதான மைமூனா என்ற பெண், சில ஆண்டுகளாகவே கூடலூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பிரபல ஜோதிடரின் வீட்டுக்கு மைமூனா சென்றுள்ளார். அங்கு ஜோதிடரிடம், “கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசித்து வருவதாகவும், தன்னுடைய வீட்டில் சில பிரச்சனைகள் இருப்பதால் வீட்டுக்கு வந்து பூஜை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, சம்பவத்தன்று அந்த பெண் சொன்ன வீட்டிற்கு ஜோதிடர் சென்றுள்ளார். ஆனால், அந்த வீடு பிரதீஷ் (36) என்ற ஒரு ரவுடியின் வீடாகும். இது தெரியாமல் சென்ற ஜோதிடரை, அங்கிருந்த பெண் மைமூனா வரவேற்றுள்ளார். ஆனால், அந்த பெண்ணுடன் சேர்த்து 9 பேர் அங்கிருந்துள்ளனர். பின்னர், அங்கு வந்த ஜோதிடரை ரவுடி பிரதீஷ் மிரட்டி தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஜோதிடரின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர், அவருக்கு பக்கத்தில் மைமூனாவும் நெருக்கமாக நின்றுள்ளார்.
அப்போது, இருவரையும் பிரதீஷ் ஆபாச புகைப்படங்கள் எடுத்துள்ளார். பின்னர், இதை சோஷியல் மீடியாவிலும், உறவினர்களுக்கும் அனுப்பிவிடுவதாக மிரட்டி அவரிடம் ரூ.20 லட்சம் கேட்டுள்ளனர். மேலும், ஜோதிடர் அணிந்திருந்த நாலரை பவுன் செயின், செல்போன், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். அப்போது, அங்கு திடீரென போலீஸ் வந்துள்ளது. அதாவது, ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு தொடர்புடைய பிரதீஷை தேடிக் கொண்டு தற்செயலாக வந்துள்ளனர்.
போலீஸ் அங்கு வந்ததும் அனைவருமே திகைத்துபோயுள்ளனர். பின்னர், தன்னுடைய உடைகளை எடுத்துக் கொண்டு ஜோதிடரும் ஓட்டம் பிடித்தார். ஆனால், யாரையும் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் மொத்த சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, மைமூனாவை போலீசார் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பிறகு அதே கொழிஞ்சாம்பாறை போலீசில் ஜோதிடர் புகாரளித்தார். அதன்பேரில், ஜோதிடரை மிரட்டிய ஸ்ரீஜேஷ் (26) என்ற இளைஞர் மட்டும் தற்போது கைதாகியிருக்கிறார். முக்கிய குற்றவாளி பிரதீஷ் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.