தமிழக மருத்துவத்துறையில் மருத்துவ உதவியாளர்களுக்கான (ஆண் மற்றும் பெண்) வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் மருத்துவ துறையின் கீழ் செயல்படும் மருத்துவ துறை ஆட்சேர்ப்பு தளமான TNMRB-யில் (Tamil Nadu Medical Services Recruitment Board) மருத்துவ உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இரண்டரை வருட உதவியாளர் படிப்பை முடித்து இருக்க வேண்டும். இதற்கு கடந்த 20 ஜூன் 2023 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி தேதியாக 10 ஜூலை, 2023 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 மற்றும் 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காலியிட விவரங்கள் : மருத்துவ உதவியாளர் (ஆண்) – 36, மருத்துவ உதவியாளர் (பெண்) – 31, கல்வித்தகுதி : மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இரண்டரை வருட நேரடி வகுப்பில் மருத்துவ உதவியாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) : ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரையில் (தகுதி அனுபவம் அடிப்படையில்). வயது வரம்பு : குறைந்த பட்சம் 18 – அதிகபட்சம் 32 (அரசு ஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்).
தேர்வு செய்யப்படும் முறை : படிப்பு , மதிப்பெண், அனுபவத்தின் படி பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிக்க தொடங்கிய தேதி – 20 ஜூன் 2023. விண்ணப்பிக்க கடைசி தேதி – 10 ஜூலை 2023 ஆகும். விண்ணப்ப கட்டணம் : பொது – ரூ.600/-, SC/ST பிரிவு – ரூ.300 ஆகும். விண்ணப்பிக்கும் முறை : தமிழ்நாடு மருத்துவ துறை ஆட்சேர்ப்பு தளமான TNMRB (Tamil Nadu Medical Services Recruitment Board) இன் அதிகாரபூர்வ தளமான mrbonline.in க்கு செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் வெளியிப்படட்ட உரிய வேலைவாய்ப்பு லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் பயனர்கள் தங்கள் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்கள் கொடுத்து (குறிப்பிட்ட அளவில் புகைப்படம், சான்றிதழ் , உறுதி அறிக்கை) குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்