fbpx

பீரியட் செக்ஸ் விரும்புபவர்களா நீங்கள்?… நம்பமுடியாத மாற்றங்களும்! நன்மைகளும்!… சில டிப்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்!

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால், உடலில் நம்ப முடியாத மாற்றங்கள் நடக்கும். மேலும் இந்த சமயத்தில் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

மாதவிடாய் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிகழும். இந்த நேரத்தில் வெறும் ரத்தப்போக்கு மட்டுமில்லாமல் வயிற்று வலி, வயிற்று பிடிப்புகள், பலவீனம், மனநிலை மாற்றங்கள் ஆகியவை ஏற்படும். சானிட்டரி நாப்கின்கள் இரத்தப்போக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், சில பெண்களுக்கும், ஆண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள ஆசை இருக்கும். இப்படி பீரியட் செக்ஸ் விரும்புபவர்கள் வெகுசிலரே. மாதவிடாய் காலங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் இந்த அனுபவத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. தற்போது மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

மாதவிடாயின் போது உறவு வைத்தால் எந்த செயற்கை உயவூட்டலும் (லூபிரிகேஷன்) தேவையில்லை. ஏனெனில் இந்த நேரத்தில் பெண்களின் உடலில் இருந்து யோனி வழியாக வெளியேறும் ரத்தமே லூப்ரிகேஷனாக செயல்படுகிறது. இது உடலுறவின் போது உங்களுக்கு வசதியாக இருக்கும். உடலுறவு பொசிஷன்கள் உடற்பயிற்சி போல செயல்பட்டு அடிவயிற்றில் உள்ள தசைப்பிடிப்பை நீக்குகிறது.

மாதவிடாய் தொடங்கும் போது பலர் மன அழுத்தத்தையும் கவலையையும் உணர்கிறார்கள். மனநிலை மாற்றங்கள் (anxiety) அடிக்கடி நிகழும். இந்த நேரத்தில் உடலுறவு கொள்வது உடலில் உள்ள மகிழ்ச்சி ஹார்மோன் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கிறது. அது மூளைக்குச் சென்று நமது பச்சாதாப உணர்வை அதிகரிக்கிறது. இது மன அழுத்தத்தை நீக்கும். மாதவிடாய் காலத்தில் உடலில் பாலுணர்வு அதிகமாக இருக்கும். உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலை மாறும். பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைந்துவிடும். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்படுகிறது. பீரியட்ஸ் சமயத்தில் பெண்களுக்கு எல்லாம் குளறுபடியாகவே இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஹார்மோன் மாற்றங்கள் உடலுறவு ஆசையை அதிகரிக்கச் செய்கின்றன.

மாதவிடாய் உடலுறவின் போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் ரொம்ப குறைவு. அதனால்தான் மாதவிடாய் காலத்தில் பலர் உடலுறவு கொள்கிறார்கள். அதே சமயம் நீங்கள் நான்காவது அல்லது ஐந்தாம் நாளில் உடலுறவு கொண்டால் கவனமாக இருங்கள். உண்மையில், ஒரு பெண்ணின் உடலில் விந்தணுக்கள் 72 மணி நேரம் வாழ முடியும். பாதுகாப்பற்ற உடலுறவு கர்ப்பத்திற்கு வழிவகுக்கும்.

மாதவிடாய் சமயம் உடலுறவு டிப்ஸ்: மாதவிடாய் நேரத்தில் வசதியான நிலைகளில் (position) மட்டுமே உடலுறவில் ஈடுபடுங்கள். மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைப்பதம் மூலம் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கிறது. அதனால் ஆணுறைகளை கண்டிப்பாக பயன்படுத்துங்கள். ஆணுறைகளைப் பயன்படுத்துவது உடலுறவின் போது விந்து வெளியேறுவதை எளிதாக்குகிறது. செக்ஸ் மசாஜ் செய்வதையும் தவிர்க்கிறது. உடலுறவு வைப்பதற்கு முன் படுக்கையில் ஒரு துணியை விரித்து கொள்ளுங்கள். உச்சக்கட்ட நேரத்திலும், ரத்தப்போக்கினாலும் உங்கள் துணைக்கு அசௌகரியம் ஏற்படலாம்.

Kokila

Next Post

அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!... அனைத்துவித சரும பிரச்சனைக்கும் ஒரே தீர்வு வாஸ்லின்!

Sat Apr 29 , 2023
நமது அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாக மேக்கப் மாறிவிட்டது. அதன்படி நமது சருமத்திற்கு பயன்படுத்தப்படும் வாஸ்லின் மூலம் 7 வழிகளில் பயன்பெறலாம். எவ்வாறு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். சரும ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும் பெண்களின் வீட்டு அலமாரியில் நிச்சயம் வாஸ்லின் (பெட்ரோலியம் ஜெல்லி) இருக்கும். இதனை குளிர் காலநிலையின் போது கைகளில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருக்க பயன்படுத்துவார்கள். அதற்கு மட்டும் அல்ல.. நீங்கள் அறியாத […]

You May Like