fbpx

மாத ஊதியம் பெறுபவர்களா நீங்கள்..? இப்படி மாட்டிக்கிட்டீங்களே..? 200% வரை அபராதம்..!! மத்திய அரசு அதிரடி..!!

மாத ஊதியம் பெறும் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்ப்பித்து வருமானவரி விலக்கு பெறுவது பரவலாக நடந்து வரும் நிலையில், மத்திய அரசு அதற்கு கடிவாளம் போட்டுள்ளது.

வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். ஆனால், சிலர் வரி ஏய்ப்பு செய்துவிடுகிறார்கள். அதனால்தான், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் தருவோருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் தருவோருக்கு பரிசும் வழங்கப்படுகிறது. அதாவது, பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படுகிறது.

எனினும், வரிஏய்ப்பு செய்வோரை நேரடியாகவே கண்டறிய மத்திய அரசு அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, வருமான வரித்துறை புதிய சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதாவது, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள், வருமான வரி செலுத்த தேவையில்லை. மொத்த வருவாயில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை கழிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வீட்டு வாடகை அளவு, வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், ரசீதுகளில், வீட்டு உரிமையாளரின் பான் கார்டு நம்பரை தர தேவையில்லை என்ற விதிமுறை உள்ளது.

மாத ஊதியம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடந்து வருகிறது. இதனை கண்டறிய மத்திய அரசு முயன்றுள்ளது. அப்படி கண்டறிந்து அவர்கள் மீது 200% வரை அபராதம் விதிக்கவும், புதிய சாப்ட்வேர் ஒன்றை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏராளமானவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய முறையில், ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு தரப்படுகிறது. ஆனால், வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு இந்த முறையில் தள்ளுபடி பெற முடியாது. எனவே, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளக்காரர்களை கண்டறியும் வகையில் புதிய சாஃப்ட்வேரை வருமான வரித்துறை உருவாக்கி உள்ளதால், போலி ரசீதை கொடுத்து தப்பிக்க முடியாத நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

Chella

Next Post

டேய் வேணாம் விட்டுடு கதறிய அண்ணி…..! கொஞ்சம் கூட இரக்கம் காட்டாத கொழுந்தனார்……! இறுதியில் நடந்த பயங்கரம்…..!

Fri Aug 4 , 2023
ஒருவருடன் நமக்கு பிரச்சனை என்று ஏற்பட்டால் அதனை எப்படியாவது சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்வது என்பதுதான் நல்லது. ஆனால் அந்த பிரச்சனை எல்லை மீறி சென்று கோபம் என்பது வந்து விட்டால் பல்வேறு விபரீதங்களை சந்திக்க நேரலாம். ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரியே அவனுடைய கோபம் தான். ஒரு மனிதனால் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தி வைக்க முடிகிறது என்றால் நிச்சயம் அவனால் அனைத்தையும் சாதிக்க முடியும். மாறாக ஒரு மனிதனின் […]

You May Like