fbpx

நகம் கடிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்!… ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்!… கைவிடுவதற்கான சில டிப்ஸ்!

நகம் கடித்தல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அத்தகைய பழக்கங்களை கைவிடுவதற்கு சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.

நகம் கடிக்கும் பழக்கம் அவ்வளவு நல்லதல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் நகத்தில் உள்ள அழுக்கு நம் உடம்பிற்குள் செல்ல நேரும். ஏனென்றால் நாம் கைகளை கொண்டு தான் அதிக இடங்களில் பயன்படுத்துகிறோம். அதை அப்படியே வாயில் வைத்து கடிக்கும் பொழுது பல கிருமிகள் நம் உடலுக்குள் செல்ல நேரிடும். அதுமட்டுமில்லாமல் நகம் கடிக்கும்போது நகத்தில் உள்ள செல்கள் சேதமடைகின்றன.
அதிக அளவில் நகம் கடிப்பதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம். மன அழுத்தத்தை குறைப்பதற்கு நகம் கடித்தல் ஒரு தீர்வு ஆகாது. அதற்கு பதிலாக யோகா பயிற்சி, மனம் சார்ந்த உளவியல் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

சோர்வடையும் நபர்கள் வெகு விரைவில் பதட்டம் அடைவார்கள். அப்படிப்பட்டவர்கள் அதிகமாக நகம் கடிக்கும் பழக்கதிற்கு ஆளாகின்றனர். நகம் கடிக்கும் எண்ணம் தோன்றும் போது டிவியில் விரும்பி நிகழ்ச்சியை பார்க்கலாம், பிடித்த புத்தகங்களை படிக்கலாம், அவ்வாறு செய்தால் நகம் கடிக்கும் பழக்கத்தை விடமுடியும். நகங்களை மிக அதிக அளவில் வளர்க்காமல் கைவிரல்களின் நீளத்திற்கு வளர்த்தால் நல்லது. அப்படி செய்யும் பொழுது நமது நகம் கடிக்கும் பழக்கம் விரைவில் மறையும். நகம் சிறிது வளர்ந்த உடன் அவற்றை வெட்டி விட்டால் நாம் நகம் கடிப்பதே மறந்து விடுவோம்.

நகங்களின் மீது கசப்பான திரவம் என்கின்ற நெயில் பாலிஷை தடவி கொண்டால் நம்மால் நகத்தை கடிக்க முடியாது. அவ்வாறு செய்தால் இந்தப் பழக்கத்தை விரைவில் கைவிடலாம். பூமர் போன்ற பொருள்களை நாம் வாயில் போட்டுமெல்லும் பொழுது அது பற்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கிறது. அவ்வாறு செய்தால் நாம் நகம் கடிப்பதை மறந்துவிடுவோம். வாய் துர்நாற்றம் ஏற்படுவதையும் இது தடுக்கிறது.
உணர்ச்சிவசப்படுதல் குறைத்துக்கொள்ளவேண்டும். நாம் அதிக அளவு டென்ஷன் ஆகும் பொழுது, மன அழுத்தத்தில் இருக்கும் பொழுதுதான் இவ்வாறான பழக்கங்கள் மேற்கொள்கிறோம். முதலில் நாம் அத்தகைய சூழல் வரும் பொழுது நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது நாம் நகம் கடிக்கும் பழக்கத்தை விட்டுவிட முடியும்.

Kokila

Next Post

கோதுமை மாவு கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமா?... அப்ப இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!

Wed May 10 , 2023
அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நம் அன்றாட வாழ்வில் பல வகைகளை மாவுகளை நாம் பயன்படுத்துவதுவோம். அதில் மிக முக்கியமானது கோதுமைமாவு. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட கோதுமை மாவு சப்பாத்தியை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இதில் […]

You May Like