இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பும் உணவு வகையாக நூடுல்ஸ் இருந்து வருகிறது. இதனை சாப்பிடுவதில் மூலம் உடலுக்கு ஏற்படும் தீமைகளை நாம் பார்ப்போம்.
நூடுல்ஸ் என்பது மிகவும் எளிமையாகவும்,விரைவாகவும் சமைக்கக்கூடியது என்றாலும், இது எந்த விதத்திலும் உடலுக்கு ஆரோக்கியமானது கிடையாது. இதில் அதிகப்படியான சோடியம்,ரசாயன சேர்மங்கள்,உணவு பாதுகாப்பு பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.நூடுல்ஸில் கலோரிகள் அதிகம், ஆனால் அவை புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் குறைவாகவே உள்ளன. இவையெல்லாம் ஜீரோ கலோரி அல்லது பயன்தராத கலோரிகளாகும்.இது மோசமான ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுத்து விடும்.
நூடுல்ஸில் சேர்க்கப்பட்டுள்ள அதிகப்படியான சோடியம் உள்ளதால் இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.இதயம், சிறுநீரகங்கள், பிற உறுப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுகிறது.
பொதுவாகவே நூடுல்ஸ் மைதா மற்றும் பாமாயில் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த எண்ணெய்களால் தயாரிக்கப்படுகிறது. இதுவும் உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.
உடனடி நூடுல்ஸில் புற்று நோயை உண்டாக்கும் அக்ரிலாமைடு எனப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயனம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி உடனடி நூடூல்ஸை பேக்கிட்டில் அடித்து வைப்பதால் பொதுவாகவே ப்ரிசர்வேட்டிவ்கள் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட நூடுல்ஸை தொடர்ந்து அதிகமாக உட்கொள்ளும் போது ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.
Read More: பட்டாசு சத்தம் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?