டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் உண்டாகும் விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக இன்று பலரின் வீடுகளில் உணவு உண்ணும்போது டிவி பார்த்து கொண்டோ அல்லது செல்போனை பார்த்து கொண்டோதான் சாப்பிடுகின்றனர் .இன்னும் சில இளைஞர்கள் செல்போனில் பேசிக்கொண்டே தான் சாப்பிடுகின்றனர் .இப்படி உணவின் மீது கவனம் இன்றி கண்டபடி சாப்பிடுவதால் நம் உடலில் பல பாதிப்புகளை சந்திக்கின்றோம் .இவ்வாறு சாப்பிடுவதால் உண்டாகும் விளைவுகள் பற்றி இந்தப்பதிவில் பார்க்கலாம். டிவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டால் நாம் சாப்பிடும் உணவின் அளவை கண்டறிய முடியாது.
அதே போல சிலர் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது சாப்பிடுவர் .இப்படி சாப்பிடும்போது நாம் எவ்வளவு உணவை சாப்பிட்டோம் என்பதை சரியாக கணிக்க முடியாமல் போகலாம். இதனால் பல நேரங்களில் நாம் உணவை அதிகமாக சாப்பிட நேரிடும், இப்படி கம்ப்யூட்டர் மற்றும் டிவி பார்த்து கொண்டே உண்பதால் நமது உடல் எடையில் மிகப்பெரிய அளவில் குண்டாகி விடும் . உணவு உண்ணும் போது இப்படி போனை பார்த்து கொண்டே சாப்பிடுவதால் கவனச்சிதறல் ஏற்பட்டு ஒரே நேரத்தில் 10% அதிகமாக சாப்பிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும் நாம் சாப்பிடும்போது நமது கவனம் வேறு எங்காவது இருந்தால் மற்றவர்களை விட 25% கூடுதலாக நாம் கலோரியை உட்கொள்ள நேரிடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .