fbpx

அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களா நீங்கள்?… இந்த 6 பிரச்சனைகள் ஏற்படுமாம்!… ஆய்வில் தகவல்!

அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் நமது உடலில் பல்வேறு பக்கவிளைவு பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக நேரம் கணினி முன் அமர்ந்தே வேலைப் பார்ப்பதால் மனதளவில் தனிமையை ஏற்படுத்துகிறது. இதனால் மனக் கவலை அதிகரிக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையினால் மனத் தொந்தரவுகள் அதிகமாகிறது. இதனால் எப்போது சோர்வான தோற்றத்திலேயே இருப்பீர்கள். உடல் அளவில் சுருசுப்பாக இருக்க முடியாமல் போகும்.கணினி, லாப்டாப் முன்பு அதிக நேரம் வேலை பார்ப்பதால் அதன் வெளிச்சம் கண்களை பாதிப்படைய செய்கிறது. இதனால் நம் தூக்க முறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மறுநாள் சுருசுருப்பாக வேலை தொடங்க முடியாமல் போவதற்கும் இதுதான் காரணம்.

ஒரே மாதிரியான நிலையில் நேராக அப்படியே அமர்ந்து வேலைப்பார்ப்பதால் முதுகுத் தண்டு பாதிப்படையக் கூடும். இதனால் உடல் தோற்றம் சீரற்ற நிலையை அடைந்துவிடும். லேப்டாப் அல்லது கணினியை நோக்கி தலையை குனிந்தவாறோ, நிமிர்ந்தோ அமர்ந்தாலும் இந்தப் பிரச்சனை வரும். கழுத்து வலி, தோல்பட்டை வலி, இடுப்பு வலி, முது வலி என நாள்பட்ட நோய்களால் தினமும் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதற்கும் நீங்கள் அதிக நேரம் அமர்ந்திருப்பதேக் காரணம். அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்வோர் என்னதான் எடைக் குறைக்க டயட் உணவுகளை உட்கொண்டாலும் அதில் பலன் இல்லை. உடலில் எந்தவித ஆற்றலும் இல்லாத பட்சத்தில் கெட்ட கொழுப்பு, கெட்ட நீர் வெளியேறாமல் தேங்கி உடல் எடையை அதிகரித்துவிடும்.

அதிக நேரம் அமர்ந்திருக்கும் போது கெட்டக் கொழுப்புகள் கரைவது குறைந்துவிடுவதால் அந்த கெட்டக் கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் தேங்கி நின்றுவிடும். அதன் விளைவாக இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் வரும். மேலும், உட்கார்ந்து வேலைப்பார்ப்பவர்கள் 64% இதய பிரச்சனைகளால் உயிரிழக்கின்றனர். அதேபோல், பக்கவாதம், மாரடைப்பு பிரச்சனைகளும் ஏற்படும். சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஞாபக மறதி அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளது. மூளையில் நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும் நரம்புகள் விரைவில் பாதிப்படையும். இதனால் புதிதாக நாம் சேகரிக்கும் நினைவுகளை அழித்துவிடும் என்று கூறப்படுகிறது.

இன்று நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் உடல் ஆற்றல்கள் அற்ற வாழ்க்கை முறைதான் காரணமாக இருக்கிறது. இதை வைத்து நார்வெயின் பல்கலைக்கழகம் நடத்திய ஹண்ட் என்கிற ஆராய்ச்சியில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோருக்கு நீரிழிவு நோய் அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளது. நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு நிச்சயம் வரக் கூடும் என்றும் எச்சரிக்கிறது. உட்கார்ந்து வேலைப்பார்ப்பவர்களுக்கு 112% சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படும்.

இதனை தடுக்கும் வழிமுறைகள் சில: முதலில் உட்கார்ந்திருக்கும் போது முதுகை நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். சாய்ந்தநிலையில் உட்காருவதை தவிர்க்கவேண்டும். சிறிது நேரம் எழுந்து நடக்கவேண்டும், உடற்பயிற்சி அவ்வபோது செய்யலாம். தண்ணீர் அதிகமாக குடிக்கவேண்டும், சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.

Kokila

Next Post

ஆரோக்கியமாக வாழவேண்டுமா?... தினமும் 20 நிமிடம் பின்னோக்கி நடந்து செல்லுங்கள்!... ஆய்வும்! அறிவுறுத்தலும்!

Mon Feb 27 , 2023
வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலின் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது .தினமும் ஒரே விதமாக நடிப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலர்க்கு சலிப்பு ஏற்படும் அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அவைகளை 20 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது. அந்த […]

You May Like