வங்கிக் கணக்கு அப்ளிகேஷன்கள் போன்ற முக்கிய ஆவணங்களைப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் ஆபாசப் படங்களை பார்ப்பதால், என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
மனிதனின் 6-வது விரலாக மாறிவிட்டது ஸ்மார்ட் போன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே இன்று செல்போன் இல்லாமல் இருப்பது இல்லை. அந்த அளவிற்கு அடிமையாக மாற்றிவிட்டது தொழில்நுட்பமும் அதன் வளர்ச்சியும். ஸ்மார்ட் போன்களின் அதிகளவு பயன்பாட்டிற்கு முக்கிய காரணம் அதிவேக இணையசேவை. அமர்ந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் பார்க்க, தெரிந்துகொள்ள உதவுகிறது. இதன் பயன் அதிகளவில் இருந்தாலும், அதனால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகம்தான்.

குறிப்பாக, ஆபாச படம். ஆபாசம் என்றால் என்னவென்றே தெரியாத பருவத்தினரைக் கூட ஆபாசப்படம் பார்க்க தூண்டுகிறது இந்த இணையம். இதனால், பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்துள்ளது. குற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆபாச வலைதளங்களால் உங்களுக்கே பெரிய தலைவலியாக மாறிவிடும். நீங்கள் ஆபாசப் படங்கள் பார்க்கும் இணைய தளங்களில் வெளியிடப்படும் டிக்கர்கள் மூலம் தேவையில்லாத வைரஸ்கள் ஆட்டோமேட்டிக்காக உங்கள் தொலைபேசியில் டவுன்லோடு ஆகிவிடும்.

வங்கிக் கணக்கு அப்ளிகேஷன்கள் போன்ற முக்கிய ஆவணங்களைப் பயன்படுத்தும் அதே போனில் ஆபாசப் படங்களை பார்க்கும் போது உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய பர்சனல் தகவல்கள் மற்றும் போட்டோக்கள் ஆகியவை திருடப்படுகின்றன. எனவே, இனியாவது ஸ்மார்ட் போனில் ஆபாச படம் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.