fbpx

பேச கூச்சப்படும் நபரா நீங்கள்..? கூச்ச சுபாவத்தை வென்று வாழ்க்கையில் வெற்றி பெறும் சில டிப்ஸ்..!  

கூச்ச சுபாவம் – நம்மில் பலருக்கும் இருக்கும் சிறு மனக் குறைபாடு. இந்த சுபாவம் கொண்ட வர்கள், எப்போதும் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பார்கள். இதனால் நான்கு பேரோடு போட்டி போட்டு, வெற்றி பெறும் முயற்சியை செய்யாமலே இருப்பார்கள். இந்தக் கூச்ச சுபாவம் என்பது என்ன, இதை எப்படி விட்டொழிப்பது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கூச்ச சுபாவத்தை எப்படி சமாளிப்பது?

* உங்களின் இந்த சுபாவத்தில் இருந்து வெளியேற, உங்களுக்கென சிறிய இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அல்லது சகா ஊழியர்களிடம் தொடர்ந்து பேசுங்கள். இந்த விஷயங்கள் உங்களின் நம்பிக்கையை வளர்க்கவும், அமைதிப்படுத்தவும் உதவும்.

* கூச்சம் உங்கள் திறமை மற்றும் வெற்றியை அங்கீகரிக்கும் சமயத்தில் வந்தால், நீங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை இழக்க நேரிடும். உங்கள் பலம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றை வெளியே கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். 

* எல்லோரும் உங்களைப் பார்க்கிறார்கள் என்று நினைப்பதை நிறுத்துங்கள். மேலும் பிறர் உங்களின் ஒவ்வொரு விஷயங்களையும் கவனிக்கவில்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அதுதான் உண்மை. எனவே நீங்கள் விரும்பியபடி இருங்கள். 

* உங்களுக்கு தெரியுமா.. நமக்கு எதிரி நாம்தான். நம்மை நாம் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்திருக்கிறோம். எனவே இனி அப்படி இருக்காமல் பிறருடன் பழகுங்கள். இது உங்களுக்குள் இருக்கும் பயம் மற்றும் கூச்சத்தை நீக்க உதவும்.

* கூச்சத்தைப் போக்க முதலில் தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். எந்த விதமான தோல்வியும் பயணத்தின் முடிவு அல்ல. அவமானத்தை வெல்வது என்றால் தோல்வியை ஏற்க கற்றுக்கொள்ளுங்கள். தோல்வியை வரவேற்கத் தொடங்கினால் வெற்றி உங்களைத் தேடி வரும்.

Read more ; பெரும் சோகம்!. பெட்ரோல் டேங்கர் வெடித்து 70 பேர் பலி!. நைஜீரியாவில் தொடரும் விபத்துகளால் மக்கள் அச்சம்!

English Summary

Are you a shy person? Some tips to overcome shyness and succeed in life..!

Next Post

எடையை குறைத்து, ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் வெங்காயச்சாறு.. இத்தனை நன்மைகளா..?

Sun Jan 19 , 2025
Does onion juice reduce weight and keep blood sugar under control?

You May Like