fbpx

சமூக வலைதளம் மூலம் வருமானம் ஈட்டுபவரா? நீங்களும் வரி செலுத்த வேண்டுமா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!! மாட்டிக்காதீங்க..!!

தற்போதைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமுக வலைதளங்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது இதில் கிடைக்கும் வருமானம் தான். தங்களின் பிரத்யேக கண்டென்டுகளை பதிவேற்றி அதில் காட்டப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய்களை நிறுவனங்கள் கண்டென்ட் உரிமையாளர்களுக்கு பகிர்ந்து வழங்குகின்றன.

முன்னதாக இதன் மூலம் ஈட்டும் வருவாயில் வரி செலுத்த வேண்டும் என்ற வரம்பு இல்லாமல் இருந்தது. தற்போது அனைவரும் இதில் கிடைக்கும் வருவாயில் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதுகுறித்து பேசிய வரி சார்ந்த தளமான TaxNodes நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அவினாஷ் சேகர், “சமூக வலைத்தளங்களில் இருந்து வருவாய் பெறும் நபர், முழு நேர அடிப்படையில் கன்டென்ட்களை உருவாக்குவதில் ஈடுபட்டு, அதில் வரும் வருமானம் முதன்மையான வருமானமாக இருந்தால், அது வணிகம் அல்லது தொழிலில் இருந்து கிடைக்கும் லாபம் மற்றும் லாபத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டு வரி விதிக்கப்படும். மேலும், ஒரு நபர் சாதாரணமாக சம்பாதிப்பவராக இருந்தால், அவருடைய மற்ற வருமானங்களுடன் ஒப்பிடுகையில் அது கணிசமான தொகையாக இல்லை என்றால், அது வேறு ஆதாரங்களில் இருந்து வரும் வருமானமாக வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப வரி விதிக்கப்படும்” என்றார்.

சமூக வலைத்தளங்களில் இருந்து பெறும் வருமானத்திற்கு சிறப்பு வருமான வரி விகிதம் எதுவும் விதிக்கப்படவில்லை. அனைத்து வருமானங்களும் வரித் துறையில் தெரிவிக்கப்பட வேண்டும். பின்னர் கிடைக்கக்கூடிய விலக்குகளைப் பெற்ற பிறகு, இந்த வருமானங்கள் அவர்களுக்குப் பொருந்தக்கூடிய வருமான வரி தரநிலைக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படும்.

நான்கியா ஆண்டர்சன் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒருவரான நீரஜ் அக்ரவாலா இதுகுறித்து பேசுகையில், “உங்கள் சுயவிவரத்தில் ப்ளூ டிக் எனப்படும் சரிபார்ப்பு குறியீடு பெறுவதற்கு செலுத்தப்படும் கட்டணங்களை எடுத்துக் கொள்வோம். உங்கள் X கணக்கின் வாயிலாக வருவாய் ஈட்டுவதற்கு, 500 அல்லது அதற்கு மேற்பட்ட யூஸர்கள் உங்களைப் பின்தொடர வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆக்ட்டிவாக வைத்திருப்பது முன்நிபந்தனைகளில் ஒன்றாகும். உங்கள் Profile-இல் ப்ளூ டிக் வைத்திருப்பது தேவையான பின்தொடர்பவர் வரம்பை பராமரிக்க உதவுகிறது. இதனால் இது வணிகம் தொடர்பான செலவாக அமைகிறது. இதன் விளைவாக, இந்தச் செலவு ‘பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம்’ என்ற பிரிவின் கீழ் விலக்குகளுக்குத் தகுதி பெறாது” என்று தெரிவித்தார்.

டிடிஎஸ் பிடித்தம் உண்டா?

இந்திய நிறுவனத்தால் பணம் செலுத்தப்பட்டால், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு படி TDS கழிக்கப்படும். மொத்தப் பணம் ரூ.30,000க்கு மேல் இருந்தால் 10% கழிக்கப்படும். வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து வருமானம் பெறப்பட்டால், நாட்டின் சட்டங்களைப் பொறுத்து TDS பிடித்தம் செய்யப்படும். இந்தியாவிற்கு வெளியே கழிக்கப்பட்ட வரிக்கு வரிக் கிரெடிட்டைப் பெற முடியுமா என்பதைப் பார்க்க, இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தை (DTAA) ஒருவர் சரிபார்க்க வேண்டும்” என்று நீரஜ் அக்ரவாலா கூறினார்.

ஜிஎஸ்டி வேண்டுமா..?

நிதி சார்ந்த துறை நிபுணர்களின் கருத்துப்படி, மொத்த வருமானம் குறிப்பிட்ட வரம்பைத் தாண்டினால் இந்த சமூக இணையதள வருமானங்களில் ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும். “ஜிஎஸ்டி விதிமுறைகளின்படி, யூடியூபர்கள், செல்வாக்கு மிக்க இணைய பிரபலங்கள், பதிவர்கள் வழங்கும் சேவைகள் என்பது ஆன்லைன் தகவல் மற்றும் தரவுத்தள அணுகல் அல்லது மீட்டெடுப்பு சேவைகள் (OIDAR) என வகைப்படுத்தப்படுகின்றன. ஆன்லைனில் தரவை விநியோகிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சேவைகளை இது உள்ளடக்கியது.

சமூக ஊடக வருவாய் குறித்து தெரியப்படுத்துவது எப்படி?

ஐடிஆர் படிவத்தில் வருவாயைத் தெரிவிப்பது என்பது வருமானத்தை யார் செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தது. அதாவது இந்திய நிறுவனம் அல்லது வெளிநாட்டு நிறுவனம். ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து பணம் பெறப்பட்டால், அது ஒரு வெளிநாட்டு வருமானம், மேலும் வருவாய் பெறுபவர் அடிப்படை விலக்கு வரம்பைப் பொருட்படுத்தாமல் ITR தாக்கல் செய்ய வேண்டும்.

Chella

Next Post

தனது தந்தையுடன் போலீஸ் உடையில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா..? பிரபல தமிழ் நடிகராக இது..?

Thu Sep 7 , 2023
தமிழ்நாடு போலீஸ் ADGP ரமேஷ் குடவ்லா-விற்கு மகனாக பிறந்தவர் தான் விஷ்ணு விஷால். அவர் எம்.பி.ஏ முடித்தப் பிறகு, TNCA லீக் ஆட்டங்களில் விளையாடி, ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார். அப்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருப்பினும் அவர் படுக்கையிலேயே இருந்த காலத்தில், படங்களை பார்க்கத் தொடங்கினார். பிறகு, அவருக்கு நடிக்க ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. அவரது தந்தை, மாமா பல […]

You May Like