fbpx

மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டிங்களா?… இந்த 5 வழிமுறைகளை பின்பற்றுங்கள்!

மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இன்றைய காலத்தில் குடிப்பழக்கம் நம் கலாசாரத்தோடு இணைந்த ஒரு செயலாகிவிட்டது. கெடாவெட்டு, கோயில் திருவிழா, கல்யாணம்… என எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும், ஏன்… மரணம் நிகழ்ந்த வீடாக இருந்தாலும்கூட குடி என்பது தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டது. சாலையோர டாஸ்மாக் கடைகளை உச்ச நீதிமன்றம் அகற்றச் சொன்னாலும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்தாலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தினாலும் முழு மதுவிலக்கு என்பது இன்றைய நிலையில் சாத்தியமில்லாததாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் அதிகமாகியிருப்பதுதான். மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கணவன் மனைவி மட்டும் இருக்கும் நியூக்ளியர் குடும்பங்களில் குடிப்பதை மனைவிமார்கள் கண்டுகொள்வதில்லை. எல்லை மீறாமல் இருந்தால் சரி என விட்டுவிடுகின்றனர். சிலர் ஜோடியாக சேர்ந்தே குடிகின்றனர். காலபோக்கில் வீட்டு பிரிட்ஜில் மதுபானங்களை இருப்பு வைக்கும் அளவிற்கு வந்துவிடுகிறார்கள். இது போன்று செய்யும் போது தினமும் மது அருந்த வேண்டும் என்ற தாகம் உண்டாகும். அவ்வாறு குடிக்கும் போது உடல்நலன் சீக்கிரம் கெட்டுப்போகும். மதுவிற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டு பொருளாதார ரீதியாகவும் இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே மதுவை வாங்கி இருப்பு வைக்கவே வைக்காதீர்கள்.

மனைவியுடன் அல்லது காதலியுடன் தகராறு, வேலைப் பளு போன்ற உணர்ச்சிகரமான சமயத்தில் மதுவை நாடிச் செல்லாதீர்கள். இது போன்று தாழ் உணர்ச்சி ஏற்படும் போது மது அருந்துவது ஆரோக்கியமானது அல்ல. அது இது போன்ற உணர்ச்சியை மேலும் கிளறி ரணமாக்கும். எனவே மோசமான நேரங்களில் கூட்டத்துடன் இருங்கள், சினிமாவுக்குச் செல்லுங்கள், விளையாடுங்கள், நீச்சல் அடியுங்கள். மது அருந்தும் நண்பர்கள் கம்பெனிக்காக பாருக்கு அழைத்தால் செல்லாதீர்கள். அந்த சூழல் குடித்தால் தான் என்ன என்ற மனநிலைக்கு அழைத்துச் செல்லும். அதற்கு பதில் நண்பர்களுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு ஓடிடியில் படம் பார்க்கலாம். ஏதேனும் விளையாட்டில் ஈடுபடலாம்.

பலரும் குறைந்த ஆல்கஹால் உடைய பீரிலிருந்து ஆரம்பித்து தான் ஹாட் ட்ரிங்க்ஸ் நோக்கிச் செல்கின்றனர். பீர் தொப்பையை மட்டும் உண்டாக்குவதில்லை. வாரத்திற்கு அடிக்கடி பீர் குடிப்பதால் கல்லீரல் பாதிப்பு, இதய பாதிப்பு, கணைய நோய், கேன்சர் ஆகியவை ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உண்டு. குடி பழக்கம் உடைய நண்பர்களுடன் பழகுவது தப்பில்லை. ஆனால் அவர்களுடன் வெளியே செல்வது, இரவு தங்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் நீங்களும் குடிக்க ஊக்குவிக்கப்படலாம். எனவே அது போன்றவர்களுடன் வெளியே சுற்றுவதை தவிருங்கள். குடிப் பழக்கம் இல்லாதவர்கள் அல்லது குறைந்த அளவு குடிப்பவர்களுடன் பழகுங்கள்.

Kokila

Next Post

எச்சரிக்கை மக்களே!... பல் துலக்க எவ்வளவு பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?... பற்கள், ஈறுகள் பாதிக்கப்படும் அபாயம்!

Mon Jul 10 , 2023
பிரஷில் எவ்வளவு பேஸ்ட் போட்டு பல் தேய்க்க வேண்டும் என்பதை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். காலை எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலையே பல்லை பிரஷ் செய்வதுதான். பல ஆண்டுகளாக பல் துலக்கினாலும் எவ்வளவு டூத்பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்ற பதில் பலருக்கும் தெளிவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பற்களை சுத்தம் செய்ய தங்களுக்கு இவ்வளவு பேஸ்ட் தேவைப்படும் என்று அவர்களாகவே குறிப்பிட்ட அளவை நிர்ணயித்து […]

You May Like