fbpx

அதிகாலை காட்சிக்கு அனுமதியா..? இன்றைய தீர்ப்புக்காக காத்திருக்கும் லியோ ரசிகர்கள்..!!

லியோ’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க கோரிய sஅவசர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி, வரும் 19 முதல் 24ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும், காலை 9.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கர்நாடகா, கேரளாவில் அதிகாலை காட்சி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் லியோவுக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி பெற்று விட வேண்டும் என்ற முடிவில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் நீதிபதி அனிதா சம்பத் முன்பு அவசர முறையீடு செய்துள்ளார்.

அதன்படி, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது லியோ திரைப்படத்தை அதிகாலை 4 மணிக்கு ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் காட்சிக்கு அனுமதித்தால் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு நாளைக்கு 6 காட்சிகளை திரையிடும் அளவுக்கு நேரம் இருக்கிறது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா, ரசிகர்கள் காட்சியை அனுமதிக்கக் கூடாது என்ற மதுரை வழக்கு தொடர்பான ஆவணங்களை இங்கு தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கில் இன்று (அக்டோபர் 17ஆம் தேதி) தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

Chella

Next Post

புதிய கார் வாங்குவோருக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்..!! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி..!! பண்டிகை கால சிறப்பு ஆஃபர்..!!

Tue Oct 17 , 2023
கார் காலம் வந்தாலே கார் விற்பனை புதிய மைல்கல்லை எட்டும். வாடிக்கையாளர்கள் மத்தியிலும் கார் வாங்குவது குறித்த யோசனை மழைக்காலத்தில்தான் அதிகரிக்கும். கூடவே, பண்டிகைகளும் வருவதால், கார் உற்பத்தியாளர்கள் தள்ளுபடி அறிவிப்புகளுடன் போட்டியில் குதிப்பார்கள். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நவராத்திரி, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு கார் வாங்கும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப கார்களை வழங்க முடியாத அளவுக்கு […]

You May Like