fbpx

நீங்களும் அயோத்தி ராமர் கோயிலுக்கு போறீங்களா..? இந்த ஆடை தான் அணிந்து செல்ல வேண்டும்..!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் நாளை முதல் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கிடையே தான் ராமர் கோவிலுக்கு செல்வோர் அணிந்து செல்ல வேண்டிய ஆடைகள் தொடர்பான ‘டிரஸ்கோட்’ விவரம் வெளியாகி உள்ளது.

அதாவது ஆண், பெண் என இருபாலரம் நமது காலாசார பாரம்பரிய உடைகளை அணிந்து செல்லலாம். ஆண்கள் என்றால் வேஷ்டி, சட்டை, குர்தா-பைஜாமா, பேண்ட்டுடன் இணைந்த ஷெர்வானி (Sherwani) அல்லது அச்கான் (Achkan), முண்டு என அழைக்கப்படும் வேஷ்டி, பருத்தி ஆடைகள் உள்ளிட்டவற்றை அணியலாம். ஆடைகள் தளர்வாக இருக்க வேண்டும். மாறாக ஷார்ட்ஸ், டீசர்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியக்கூடாது.

பெண்கள் என்றால் புடவை அணியலாம். பருத்தி, பட்டு சேலைகளும் லைட் வண்ணத்தில் அணியலாம். இல்லாவிட்டால் சல்வார் கமீஸ், லெஹெங்கா சோளி, பலாஸ்ஸோ சூட் அணியலாம். ப்ளவுசுடன் கூடி லாங்க் ஸ்கீட்டை (Long Skirt with Blouse) துப்பட்டாவுடன் அணியலாம். தோள்பட்டை மற்றும் முழங்கால் தெரியும் வகையிலான ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையும் அணிந்து செல்லக் கூடாது.

Chella

Next Post

பட்டர் சிக்கன், தால் மக்கானி உணவுகளை கண்டுபிடித்தது நாங்கள் தான்..!! ஐகோர்ட்டுக்கு வந்த விநோத வழக்கு..!!

Mon Jan 22 , 2024
பட்டர் சிக்கன் மற்றும் தால்மக்கானி ஆகிய உணவு வகைகளை உருவாக்கியவர் யார் என்பது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசைவ விரும்பிகளிடம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் உணவு வகைகளில் ஒன்று பட்டர் சிக்கன். இதே போல் சைவ பிரியர்கள் இடையே தால் மக்கானி என்ற உணவு வகை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு உணவு வகைகளையும் முதல் முதலாக […]

You May Like