fbpx

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுபவர்களா நீங்கள்?… அதில் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

பழைய காலத்தில் முறையில், சூரியன் மறைந்த அந்திப் பொழுதில் இரவு உணவை சாப்பிட்டால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கும். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பழைய காலத்தில் முறையில், சூரியன் மறைந்த அந்திப் பொழுதில் சாப்பிட்டால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முன்கூட்டியே சாப்பிடுவதால் செரிமானத்திற்கு மிக அதிகமான நேரம் கிடைக்கிறது மற்றும் மாலை 5 அல்லது 6 மணிக்கு கொஞ்சம் வயிற்றை நிரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் துரித உணவுகளை நாடும் பழக்கம் தவிர்க்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சாப்பிட்டால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது. உடல் பருமன் கொண்ட 15 நபர்களுக்கு இரவு 9 மணிக்கு சாப்பிடும் பழக்கம் இருந்தது. அவர்களை மாலை 5 மணிக்கு சாப்பிட வைத்து, நாள்பட அவர்களின் உடல் மாற்றங்களை கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வெகு முன்னதாக சாப்பிடுவதால் நல்ல தூக்கம் வரும். சூரிய அஸ்தமன நேரத்தில் நம் உடலில் மெலோடினின் என்னும் ஹார்மோன் அதிகப்படியாக உற்பத்தி ஆக தொடங்குகிறது. அதற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட்டால் நல்ல தூக்கத்திற்கு உத்தரவாதம் கிடைக்கிறது. அதே போல சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நாம் அதிக உணவை சாப்பிடும் போது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை உயர்த்தும் இன்சுலினை நம் உடல் வெளியிடுகிறது. எனவே சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கார்டிசோல் மற்றும் மெலடோனின் ஆகியவை ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன. இது நிறைய ஹார்மோன் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.இரவு உணவு சீக்கிரமே முடித்து கொள்வதன் காரணமாக கலோரிகள் விரைவாக எரிக்கப்பட்டு விடுவதால் உடல் எடை குறைப்புக்கு இப்பழக்கம் உதவியாக அமையும். அடுத்த நாள் காலையில் அதிக ஆற்றல் கிடைக்கும் மற்றும் புத்துணர்ச்சியாக உணர முடியும். இன்றைய அவசர வாழ்க்கை முறைக்கு இடையே இதை உங்களால் செய்து கொள்ள முடிந்தால் உண்மையிலேயே நீங்கள் பாக்கியசாலிதான்.

Kokila

Next Post

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி...! காலை‌ 9 முதல் 5 மணி வரை மட்டுமே...!

Mon Jun 26 , 2023
நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ 2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ அனைவரும்‌ தாம்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ மற்றும்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌உயர்கல்வி படிப்புகள்‌ தொடர வேண்டுமென்கின்ற நோக்கில்‌ உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ வழங்குவதற்காக நான்‌ முதல்வன்‌ -‘உயர்வுக்குபடி’ என்ற முகாமானது மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று நாமக்கல்‌ அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில்‌1,493 மாணவர்களுக்கு காலை 9 மணி […]

You May Like