fbpx

ஐஸ் வாட்டர் குடிப்பவர்களா நீங்கள்?… அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை தெரிந்துகொள்வோம்!

அடிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைக்க சிலர் ஐஸ் வாட்டர் குடிக்கின்றனர். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

உலகில் பிறந்த எல்லா உயிரினங்களும் நீரின் தேவையை ஏதோ ஒரு வகையில் பெற்ற வண்ணமே உள்ளன. அடிப்படைத் தேவைகளில் ஒன்றான நீர், மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானதாகும். சாதரணமாக ஒரு மனிதன் நீர் இன்றி 3- 5 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், கோடை காலத்தில் தொண்டைக்கு இதமாக ஐஸ் வாட்டர் தான் பலரின் தேர்வாக இருக்கும். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, குளிர்ந்த நீர் (ஐஸ் வாட்டர்) குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கோடையில் குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை இங்கு காணலாம். வெயிலுக்கு இதமாக அடிக்கடி குளிர்ந்த நீரைக் குடிப்பதால் தொண்டை புண், மூக்கடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிலும் சாப்பிட்டிற்கு பின், குளிர்ந்த நீரைக் குடிப்பது சுவாசக் குழாயில் அதிகப்படியான சளி உருவாவதற்கும், பல்வேறு அழற்சி நோய்த்தொற்றுகளுக்கும் வழிவகுக்கும். அதனால் முடிந்தவரை குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்கவும்.

குளிர்ந்த நீர் குடிப்பது இதயத் துடிப்பைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த நீர் குடிக்கும்போது தலையில் உள்ள நரம்புகள் கட்டுபடுத்தப்படுகிறது. இது இதயத் துடிப்பைக் குறைக்கிறது. அதிகப்படியான குளிர்ந்த நீரை பருகினால் இரத்த நாளங்களில் சுருக்கத்தை ஏற்படுத்தும். இது செரிமானத்தை தொந்தரவு செய்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைக் கட்டுப்படுத்துகிறது.குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கம் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு எரிக்கச் செய்வதை கடினமாக்குகிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்கவும்.

குளிர்ந்த நீரைக் குடிப்பதால் பற்களின் உணர்திறன், மெல்லுவதில் சிரமம் அல்லது வேறு எந்த பானத்தையும் குடிப்பதில் சிரமம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, சாதாரண அறை வெப்பநிலை தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும்.குளிர்ந்த நீரை குடித்த உடனேயே அது மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதை அடிக்கடி குடிப்பதால் மூளை உறைதல் பிரச்சனை ஏற்படும். குளிரூட்டப்பட்ட நீர் முதுகெலும்பு நரம்புகளை குளிர்விக்கிறது. இதனால் மூளை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக தலைவலி, சைனஸ் பிரச்சனை தோன்றும்.பிரிட்ஜில் வைத்து குடிக்கும் தண்ணீர், உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் கடினமாக்கி, உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

Kokila

Next Post

அடிக்கும் வெயிலுக்கு தென்னங்குருத்தை எங்காவது பார்த்தால் மிஸ் பண்ணிடாதீங்க!... மருத்துவ பயன்கள் இதோ!

Sun Apr 2 , 2023
தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தென்னங்குருத்தில் உள்ள மருத்துவ நன்மைகளை இந்த தொகுப்பில் அறிந்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சிப்போம். தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தென்னம்பூ, இளநீர், தென்னை ஓலை, தென்னங்குருத்து, தேங்காய், தேங்காய்ப்பூ, என அனைத்தும் மருத்துவ பயன்களை அள்ளித்தருகிறது. இருப்பினும், இதன் மருத்துவ பயன்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அந்தவகையில் தென்னங்குருத்தின் பயன்களை தெரிந்துகொண்டால் சாலையோரங்களில் விற்கபடுவதை பார்த்துவிட்டு கடந்துசெல்லமாட்டீர்கள். பொதுவாக பொள்ளாச்சி, மதுரை, கேரளா உள்ளிட்ட […]

You May Like