இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. இந்நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய கணக்குடன் ஆதார் எண், பான் எண்ணை செப்.30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஓய்வுகால சேமிப்பு திட்டம் என்பதால் அதில் பல பயனர்கள் இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி ஓய்வுக் காலத்தில் அவர்களின் பண தேவைக்கு இந்த திட்டம் பயன் உள்ளதாக இருக்கிறது. இத்திட்டத்தில் இணைவதற்கு ஒவ்வொரு நிதி ஆண்டில் இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை செலுத்தலாம். இதன் மூலம் வருமான வரி சலுகைகளுக்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆதார், பான் எண்ணை இணைப்பதால் மட்டுமே தொடர்ந்து இச்சேவைகளை பெற முடியும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.