fbpx

SBI வங்கி வாடிக்கையாளரா நீங்கள்..? ஏடிஎம் கார்டு இல்லாமல் செல்போன் மூலம் எப்படி பணம் எடுப்பது தெரியுமா..?

இனி ATM-களில் பணம் எடுக்க கார்டு தேவையில்லை. இந்த புதிய சேவையை முதல் முறையாக, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரண்டு வங்கிகளும், inter-operable cardless cash withdrawal என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் தங்களின் ATM-களுக்குள் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளும் அம்சத்தை வழங்கியிருக்கிறார்கள்.

இப்போது இதைப் பற்றிய தகவல் வெளியாகி பரவி வரும் நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு, அதாவது 2022 ஏப்ரல் 8 அன்று, எந்த வங்கியின் ஏடிஎம்மில் இருந்தும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் என்று அறிவித்தது. இந்த பரிவர்த்தனைகள் எல்லாம் UPI அம்சத்தைப் பயன்படுத்தி செயல்முறைப்படுத்தப்படும். இதன் மூலம், ஏடிஎம் கார்டை எப்போதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவை இல்லை.

உங்களிடம் இந்தியன் வங்கியில் கணக்கு இருந்தால், நீங்கள் யூனியன் வங்கி ஏடிஎம்மில் UPI அம்சத்தைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். வேறு வங்கி ஏடிஎம்களில் மொபைல் போனின் மூலம் பணம் எடுப்பது எப்படி? கார்டுலெஸ் கேஷ் வித்டிராவல் (cardless cash withdrawal) என்பது மிகவும் எளிது. மொபைலில் UPI ஸ்கேன் செய்யும் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் ATM-மில் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால், கார்டுக்கு பதிலாக பணம் எடுக்கலாம். எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும், ஒருங்கிணைந்த கார்ட்லெஸ் கேஷ் வித்டிராவல் இயக்கப்பட்டிருக்கும் ATM மூலம், UPI QR Cash என்ற அம்சத்தைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

இது ATM-களின் திரையில், ஒரு முறை பயன்படுத்தக் கூடிய டைனமிக் QR கோடு தோன்றும். அவ்வாறு QR கோடு தெரியும் போது, யூசர்கள் UPI செயலியைப் பயன்படுத்தி, அந்த கோடை ஸ்கேன் செய்து தேவையான தொகையை பெற்றுக் கொள்ளலாம். இந்த கார்டுலெஸ் கேஷ் எடுக்கும் வசதியை QR கோடு எனேபில் செய்யப்பட்டிருக்கும் இயந்திரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களோ, அந்த வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியை நீங்கள் உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து உங்கள் கணக்கு பதிவு செய்திருக்க வேண்டும். உதாரணமாக, உங்களிடம் SBI கணக்கு இருந்தால், SBI யோனோ அல்லது யோனோ லைட் செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் QR Cash இயக்கப்பட்டிருக்கும் ATM மையத்தில், இயந்திரத்தின் திரையில் QR CASH என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். திரையில் நீங்கள் ரூ.2,000 அல்லது ரூ. 4,000 என்று காண்பிக்கப்படும் ஆப்ஷனில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, திரையில் காண்பிக்கப்படும் QR கோடை உங்கள் யோனோ ஆப்பின் ‘QR cash withdrawal’ என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், ATM நீங்கள் தேர்வு செய்த தொகையை டிஸ்பென்ஸ் செய்யும். இதே போல மற்ற வங்கிகளும் இந்த வசதியை வழங்கியுள்ளது. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக நீங்கள் 1 லட்ச ரூபாய் வரை UPI வழியாக ஸ்கேன் செய்து வித்டிரா செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி வரம்பை நிர்ணயித்துள்ளது. தினசரி வித்டிரா செய்யும் வரம்புகள் மற்றும் ஒரு முறை அதிக பட்சம் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பது அந்தந்த வங்கிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

Read More : ”எனக்கு எல்லா சித்து வேலையும் தெரியும்”..!! ”உன்னை கோடீஸ்வரனாக்குறேன்”..!! பணத்தை கொடுத்த ஒரு மணி நேரத்தில் பதறிப்போன இளைஞர்..!! நடந்தது என்ன..?

Chella

Next Post

”பாதுகாப்பை உறுதி செய்வதற்குள் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ”..? தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்..!!

Wed Feb 5 , 2025
Has the government been deliberately lax in allowing drug dealers to move freely?

You May Like