fbpx

SBI கிரெடிட் கார்ட் வைத்து இருப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி முதல் SBI கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கும், வீட்டு வாடகைக்கான பேமெண்ட் கட்டணத்தையும் அதிகரித்துள்ளது,

ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்குத் தற்போது 99 ரூபாய் + வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இதற்கு ரூபாய் 100 அதிகரித்து 199 ரூபாய் + வரி வசூலிக்கப்பட உள்ளது. மேலும் வீட்டு வாடகைக்கான பேமெண்ட்-க்கு 99 ரூபாய் + வரி விதிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 15முதல் நீங்கள் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் புதிய கட்டணங்கள் அடிப்படையில் வசூலிக்கப்படும்.

தற்போது இந்தியாவில் பெரும்பாலான சேவைக்குக் கிரெடிட் கார்ட் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது, சமீபத்தில் மத்திய அரசு வருமான வரி செலுத்துவதற்குக் கூடக் கிரெடிட் கார்ட் பயன்படுத்த அனுமதி அளித்து அதற்கான மாற்றங்களை வருமான வரித் தளத்தில் செய்தது. குறிப்பாக வீட்டு வாடகை கூட கிரெடிட் கார்டில் செலுத்தும் சேவை பலருக்குப் பெரிய அளவில் உதவியது. ஆனால் அதற்கு SBI வங்கி தற்போது கட்டணம் அறிவித்துள்ளது பெரும் ஏமாற்றத்தையே அளிக்கும். ஏற்கனவே அக்டோபர் 20 முதல் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வீட்டு வாடகை செலுத்துவோருக்கு கட்டணத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

அமெரிக்காவில் வேகமாக பரவும் கோவிட் பி.க்யூ 1 …… !! இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் ?

Sat Oct 15 , 2022
அமெரிக்காவில் புதியதாக பரவி வரும் கோவிட் பி.க்யூ 1 என்ற மாறுபட்ட வைரஸ் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கோவிட். 10 நோய்த்தொற்று ஏற்பட்டவர்களிடம் சோதனைக்குட்படுத்தப்பட்டு இதன் போக்கை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இது கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் புதிய பதவிகளின்படி உலகம் முழுவதிலும் அமெரிக்காவிலும் புதியதாக தொற்று பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து […]
கொரோனா

You May Like