fbpx

பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கப்போகிறீர்களா?… மோசடிகளை தவிர்க்க புதிய வசதி அறிமுகம்!… முழுவிவரம் இதோ!

பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது, ஆதாா் அட்டையை ‘டிஜி லாக்கா்’ முறையில் சமா்ப்பிக்க வேண்டும் என திருச்சி மண்டல கடவுச் சீட்டு அலுவலா் ஆனந்த் தெரிவித்து உள்ளாா்.

பாஸ்போர்ட் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது பல்வேறு மோசடிகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. முறைகேடான முறையில் போலி ஆவணங்களை பெறுவதும் தொடர் கதையாகி உள்ளன. வெளிநாடு செல்வதற்கு தேவையான அடிப்படை ஆவணமான பாஸ்போர்டிலும் முறைகேடுகள் நடக்கின்றன. இதனை தடுக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருச்சி மண்டல கடவுச் சீட்டு அலுவலா் ஆா்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, தேவைப்படும் ஆவணங்களில் சிலவற்றை ‘டிஜி லாக்கா்’ முறையில் சமா்ப்பித்து அவற்றை சரிபாா்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை ஆதாா் அட்டை உண்மை மற்றும் நகல்களை நேரடியாக பிஎஸ்கே மையங்களில் சமா்ப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால் அவற்றில் மோசடிகள் அதிகரித்து உள்ளதால், அதை தடுக்கும் வகையில் ஆதாா் அட்டையை ‘டிஜி லாக்கா்’ முறையில் சரிபாா்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு, இனி அதே முறையில் ஆதாா் அட்டையை இணைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதுபோல ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும், சரிபாா்த்தல், செயலாக்கம் உள்ளிட்டவற்றுக்கு செலவாகும் நேரத்தை குறைக்கும் வகையில் ‘டிஜி லாக்கா்’ முறையில், பிறப்புச் சான்று, கல்விச் சான்றுகள் உள்ளிட்ட சில ஆவணங்களை ஆவணப்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

எனவே, பாஸ்போா்ட் சேவை மையங்களுக்கு செல்லும்போது ஆவணங்களின் உண்மை நகல்களை கொண்டு செல்லத் தேவையில்லை. அதுபோல இனி வரும் காலங்களில் ஆதாா் அட்டையை நேரடியாக கொண்டு செல்ல வேண்டாம். மாறாக, ‘டிஜி லாக்கா்’ முறையில் சரி பாா்க்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அந்த முறையை பொதுமக்கள் இனி பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்று திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலா் ஆா்.ஆனந்த் தெரிவித்து உள்ளாா்.

Kokila

Next Post

மாதம் ரூ.62,000 வரை சம்பளம்!… தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை!… உடனே அப்ளை பண்ணுங்க!

Thu Aug 3 , 2023
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள இசிஜி டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள இசிஜி டெக்னிசியன் பணிக்கு 95 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரிவு வாரியாக பார்த்தால் ஜிடி பிரிவை சேர்ந்த 29 பேர், பிசி பிரிவை சேர்ந்த 24 பேர், பிசி(எம்) பிரிவை சேர்ந்த 4 பேர், […]

You May Like