அதிக பணவீக்க விகிதம் காரணமாக ஏழை, எளிய நடுத்தர மக்கள் வீடு வாங்க முடியாமல் தவிக்கின்றனர். ரியல் எஸ்டேட்டில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தால், பலருக்கும் சொந்த வீடு என்பது நிறைவேறாமல் போகிறது. சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு, மத்திய அரசால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே, வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாகும்.
நில உரிமையாளர்களுக்கு மானியம் எவ்வளவு..?
நில உரிமையாளர்களுக்கான ரூ.2.5 லட்சம் மானியம் என்பது, வீடு வாங்குவதில் விளிம்புநிலை மக்களுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்ட வட்டி மானியமாகும். இந்த வட்டி மானியம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் ஒரு பகுதியாகும். வீட்டுக் கடன் மூலம் ஒரு தனிநபர் வீடு வாங்க முயற்சிக்கும்போது, அரசு ரூ.2.5 லட்சம் மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்திற்கு தகுதி பெற சில குறிப்பிட்ட அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
அதன்படி, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரையிலும், குறைந்த வருமானக் குழுவின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலும், நடுத்தர வருமானக் குழுவின் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரையிலும் இருக்க வேண்டும். இந்த வட்டி மானியத்தை முதல் முறையாக வீடு வாங்குபவர்களால் மட்டுமே பெற முடியும். வாங்கப்பட்ட சொத்து வணிக நோக்கங்களுக்காக அல்ல, தனிப்பட்ட நோக்கங்களுக்காக இருக்க வேண்டும்.
ரூ.2.5 லட்சம் மானியத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது..?
* PMAY இன் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அடையாளம் காண வேண்டும்.
* கடன் வழங்குபவர் வழங்கிய விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
* நீங்கள் கொடுக்கப்படும் தகவல்கள் உண்மையா என சரிபார்க்கப்படும்.
* இதெல்லாம், தடையின்றி நடந்தால், வட்டி மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை..?
* வட்டி மானியத்தைப் பெறுவதற்கு அடையாளச் சான்று, வருமானச் சான்று, முகவரிச் சான்று, நில உரிமை ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரம் தேவை.