fbpx

கார் வாங்கப்போறீங்களா..? லேட் பண்ணாதீங்க..!! நஷ்டம் உங்களுக்கு தான்..!!

மாருதி சுஸுகியில் தொடங்கி பல்வேறு நிறுவனங்களும் புத்தாண்டு முதல் கார் விலையை கணிசமாக ஏற்ற வாய்ப்புள்ளது. ஜனவரி முதல் மாருதி நிறுவனத்தின் கார்கள் விலை உயர்வு காண்பது உறுதியாகியுள்ளது. மும்பை பங்குச் சந்தைக்கு மாருதி நிறுவனம் வழங்கிய அறிவிக்கையில் இந்த விவரம் அடங்கியுள்ளது. ஆனால், எத்தனை சதவீதம் விலை உயர்த்தப்படும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. இருசக்கர வாகனத்தில் இருந்து தங்கள் முதல் காருக்கு முன்னேற விரும்புவோர் முதல் சொகுசுக் கார் பிரியர்கள் வரை, பல தரப்பினருக்கான பல வகையிலான கார்களை மாருதி தயாரித்து வருகிறது. அவை ரூ.4 லட்சத்தில் தொடங்கி ரூ.35 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கின்றன.

சாமானியர்களின் முதல் தேர்வாக இருக்கும் மாருதி, அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மத்திய வர்க்கத்தினருக்கான பல்வேறு கார்களை புழக்கத்தில் விட்டிருக்கிறது. தரம், பாதுகாப்பு, உறுதி ஆகியவற்றில் சமரசமின்றி தயாரிப்புகளை வெளியிடுவதாக கூறும், மாருதி இந்த வகையில் இந்தியாவில் முன்னணி வகித்து வருகிறது. எனினும், தயாரிப்பு செலவினங்கள் உயர்வு கண்டது மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களினால் தவிர்க்க முடியாத விலை உயர்வினை மாருதி அறிவிக்கவுள்ளது.

முன்னதாக ஜனவரி, 2023இல் கார்களின் விலையில் 1.1 சதவீதம் என்றளவுக்கு உயர்த்தி மாருதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது மீண்டும் அடுத்த புத்தாண்டுக்கு புதிய விலை உயர்வை அறிவிக்கவுள்ளது. எனவே, தங்களது முதல் காரை மாருதி நிறுவனத்தில் வாங்க விரும்புவோர், டிசம்பருக்குள் ஒரு முடிவுக்கு வருவது லாபகரமாக அமையக் கூடும். மேலும், மாருதி சுஸுகியைத் தொடர்ந்து, சந்தையில் இருக்கும் மற்ற கார் நிறுவனங்களும், தங்கள் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

திருமணமானவரா நீங்கள்? பணத்தை இரட்டிப்பாக்க செம ஐடியா..!! இப்படி முதலீடு பண்ணி பாருங்க..!!

Tue Nov 28 , 2023
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டில் (PPF) முதலீடு செய்வது நல்ல ரிட்டன்களை பெற்று தருவதோடு, அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இதனால் தான் பல இந்தியர்கள் இந்த அரசு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். PPF திட்டமானது E-E-E பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால், உங்களது முதலீடு, வட்டி மற்றும் மெச்சூரிட்டியின் போது நீங்கள் பெறக்கூடிய தொகை ஆகிய எதற்குமே நீங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. PPF திட்டத்தில் […]

You May Like