அவசர காலத்தில் நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிரெடிட் கார்டில் நிறைய பயன்கள் உள்ளன. வெகுமதிகள், கேஷ்பேக், தள்ளுபடிகள், சலுகைகள் போன்ற பலன்கள் கிரெடிட் கார்டுகளில் கிடைக்கும். சமீப காலமாக கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ள போதிலும், கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் நாம் பெரிய கடன் வலையில் சிக்க நேரிடும்.
உடனடி பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நமது CIBIL ஸ்கோரையும் மேம்படுத்துகிறது. ஆனால் கிரெடிட் கார்டு பெறுவதற்கு முன்பு, எப்படி கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுத்தால் பணத்தைச் சேமிக்க முடியும் என்பது பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
செலவு பழக்க வழக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் :
பெரும்பாலான மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, தங்கள் செலவு பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளாமல் கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பது தான். ஒவ்வொரு கிரெடிட் கார்டு வகைகளும் மாறுபடுகின்றன. சான்றாக உணவு, பயணம், மளிகை பொருட்கள், எரிபொருள் போன்ற செலவு வகைகளுக்கு ஏற்றவாறு நன்மைகளை வழங்குகின்றன.
நீங்கள் எதற்காக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செலவு செய்ய இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள, கடந்த சில மாதங்களில் உங்களுடைய செலவுகளை மதிப்பாய்வு செய்யுங்கள். ரிவார்டுகள் மற்றும் பலன்களை அதிகரிக்க உங்கள் செலவு பழக்கவழக்கங்களுடன் ஒத்துப் போகும் கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யுங்கள்
வருடாந்திர கட்டணம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் :
கிரெடிட் கார்டுகள், பெரும்பாலும் வருடாந்திர கட்டணங்களுடன் வருகின்றன. இது கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் பொறுத்து மாறுபடும். எனவே குறைந்த அளவில் வருடாந்திரக் கட்டணத்தை வசூலிக்கும் கிரெடிட் கார்டு வழங்குநர்களைத் தேர்வு செய்யவும். இது உங்கள் பணத்தைச் சேமிக்க உதவும்.
வட்டி விகிதங்களை கவனிக்க வேண்டும் :
ரெடிட் கார்டுகளுக்கு பொதுவாகவே வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக உங்கள் பில்களைச் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் போது. கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது, அதன் வட்டி விகிதங்களைப் பார்த்து தேர்வு செய்யுங்கள். கிரெடிட் கார்டை பெறுவதற்கு முன்பு, அவர்கள் கொடுக்கும் ரிவார்டு மற்றும் பலன்களில் மட்டுமே கவனம் செலுத்தும் போது, வட்டி விகிதங்களைப் பலர் கவனிப்பதில்லை. எனவே, காலப்போக்கில் உங்களுடைய வட்டி விகிதங்களைச் சேமிக்க குறைந்த APR (Annual Percentage Rate) கொண்டக் கார்டைத் தேர்வு செய்யவும்.
ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளைப் பெற விண்ணப்பித்தல்:
பல கார்டுகளுக்கு ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பது, உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். மேலும், நீங்கள் அதிக வட்டியுடன் திருப்பிச் செலுத்த நேரிடலாம். எனவே, ஆரோக்கியமான கடன் விவரத்தை பராமரிக்க, உங்கள் நிதி இலக்குகளுடன் கூடிய ஏதேனும் ஒரு கார்டைத் தேர்வு செய்யுங்கள்.
ஃபைன் மற்றும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்:
கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும் முன், கட்டணங்களில் உள்ள வட்டி விகிதங்கள் மற்றும் அபராதங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை முழுமையாக மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் வெளிநாட்டு பண பரிவர்த்தனைக்கான கட்டணம் போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, நீங்கள் சர்வதேச அளவில் அடிக்கடி பயணம் செய்தால், இது போன்ற நுணுக்கங்களைப் புரிந்து கொள்வது உதவியாகவும் உங்கள் கார்டைத் திறம்பட நிர்வகிக்கவும் உதவும்.
பாதுகாப்பு அம்சங்களை ஆராய வேண்டும் :
இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில், கிரெடிட் கார்டு தொடர்பான மோசடிகள் அதிகரித்துள்ளன. EMV சிப் தொழில்நுட்பம், ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான அங்கீகாரம் பெற்ற இணையதளங்கள் அல்லது செயலிகள் உள்ளதா என்ற விவரங்களை ஆராயவும். கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்வதற்கு முன்பு கிரெடிட் கார்டு வழங்குபவர்களின் பாதுகாப்பு கொள்கைகள் குறித்துத் தெரிந்து கொள்ளவும்.